TN TET 2022 தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
TN TET 2022 தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TN TET 2022 தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TN TET 2022 தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிய TN TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் ஜூலை மாத இறுதிக்குள் தேர்வுகள் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

TN TET தேர்வுகள்:

தமிழ்நாடில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியராக பணிபுரிய TET தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணியில் நியமிக்கப்படுவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக போட்டித்தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கட்டாயம் தேர்வு நடைபெறும் என மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. அதற்கான பதிவு தொடங்கப்பட்டு 6.3 லட்சத்திற்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

ஆனால் தற்போது வரை தேர்வு தேதிகள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருவதால், அதற்கு பின் ஜூலை மாத இறுதிக்குள் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த கல்லூரிகளில் பேராசிரியராக குறைந்தபட்ச தகுதியாக TET தேர்வில் தேர்ச்சி அவசியமாகி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் TN TET தாள் 1ல் தகுதி பெறுபவர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையும், தாள் 2ல் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிகளில் நியமிக்கப்படுவார்கள்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – ஆசிரியா் கூட்டணி வேண்டுகோள்!

இரண்டு தாள்களிலும் தலா ஒரு மதிப்பெண் கொண்ட 150 மல்டிபிள் சாய்ஸ் (MCQ) கேள்விகள் இடம்பெறும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் இதில் இருக்காது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தகுதி மதிப்பெண் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். எனவே ஆசிரியராக வேண்டும் என்ற கனவுடன் தயாராகி வரும் பலர் இந்த தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் இது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒரு சிலர் ஜூலை மாத இறுதிக்குள் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here