தமிழக தனித்தேர்வர்களுக்கான 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு – கால அட்டவணை வெளியீடு!

0
தமிழக தனித்தேர்வர்களுக்கான 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு - கால அட்டவணை வெளியீடு!
தமிழக தனித்தேர்வர்களுக்கான 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு - கால அட்டவணை வெளியீடு!
தமிழக தனித்தேர்வர்களுக்கான 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு – கால அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கும் தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுத்தேர்வு:

தமிழகத்தில் கடந்த வருடம் முதல் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டது. மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பரவியதால் பள்ளிகள் திறக்க வாய்ப்பு கிட்டவில்லை. மேலும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதால் மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு போன்ற எந்த தேர்வுகளும் நடைபெறவில்லை. 1 முதல் 9 வரையிலான வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பல்கலையில் அக்.20 முதல் நேரடி வகுப்புகள் தொடக்கம் – தடுப்பூசி கட்டாயம்!

மேலும் 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கும் மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது. இந்த நேரத்தில் கடந்த மாதம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. அதற்கான தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு வரும் 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால அட்டவணை:

  • 08.11.2021 – தமிழ்
  • 09.10.2021 – ஆங்கிலம்
  • 10.11.2021 – கணிதம்
  • 11.11.2021 – அறிவியல்
  • 12.10.2021 – சமூக அறிவியல்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!