TNPSC Group 2 தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – கட் ஆஃப் மதிப்பெண், ரிசல்ட் தேதி குறித்த விவரம் வெளியீடு!
மே 21 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2 மற்றும் 2A தேர்விற்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு என்பது குறித்தும், தேர்வு முடிவுகளை எவ்வாறு பார்ப்பது என்பது குறித்தான தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது.
குரூப் 2 மற்றும் 2A தேர்வு:
தமிழகம் முழுவதும் குரூப் 2 மற்றும் 2A தேர்வு கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்றது. 5529 காலிப்பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த குரூப் 2 மற்றும் 2A தேர்வை கிட்டதட்ட 11 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இந்தாண்டு குரூப் 2 தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததால் கட்ஆப் மதிப்பெண் எவ்வளவு இருக்கும் என்பதை அறிந்துகொள்ள தேர்வாளர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். மேலும், குரூப் 2 மற்றும் 2A தேர்விற்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குரூப் 2-க்கான முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கிறது.
தமிழகத்தில் RRB தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – சிறப்பு ரயில்கள் இயக்கம்!
தற்போது குரூப் 2 மற்றும் 2A தேர்விற்கான கட் ஆஃப் மதிப்பெண்ணின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொது விண்ணப்பதாரர் ஆண்களுக்கு 161 மதிப்பெண்ணும், பெண்களுக்கு 158 மதிப்பெண்ணும் கட் ஆஃப் மதிப்பெண் என அறிவிக்கப்பட்டுள்ளது. BC விண்ணப்பதாரர் ஆண்களுக்கு 159 மதிப்பெண்ணும், பெண்களுக்கு 157 மதிப்பெண்ணும், MBC விண்ணப்பதாரர் ஆண்களுக்கு 156 மதிப்பெண்ணும், பெண்களுக்கு 154 மதிப்பெண்ணும், SC விண்ணப்பதாரர் ஆண்களுக்கு 153 மதிப்பெண்ணும், பெண்களுக்கு 150 மதிப்பெண்ணும், ST விண்ணப்பதாரர் ஆண்களுக்கு 144 மதிப்பெண்ணும், பெண்களுக்கு 140 மதிப்பெண்ணும் கட் ஆஃப் மதிப்பெண் பெற வேண்டும்.
Exams Daily Mobile App Download
தற்போது தேர்வு முடிவுகளை எவ்வாறு பார்ப்பது என்பதையும் பார்க்கலாம். முதலில், TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான tnpsc.gov.in க்கு சென்று WHATS NEW என்கிற பகுதிக்கு சென்று TNPSC குரூப் 2 தேர்வு முடிவுக்கான விளம்பரத்தை கிளிக் செய்ய வேண்டும். பின்பு, தேர்வு முடிவுகளுக்கான இணைப்பை கண்டுபிடித்து அதில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவிட்டு சமர்ப்பி என்பதை கிளிக் செய்தால் pdf கோப்பு வடிவத்தில் தேர்வு முடிவுகள் காண்பிக்கப்படும்.