இந்தியாவில் தீவிரமடையும் தினசரி கொரோனா பாதிப்பு ,15 பேர் பலி – பதற்றத்தில் பொதுமக்கள்!

0
இந்தியாவில் தீவிரமடையும் தினசரி கொரோனா பாதிப்பு ,15 பேர் பலி - பதற்றத்தில் பொதுமக்கள்!
இந்தியாவில் தீவிரமடையும் தினசரி கொரோனா பாதிப்பு ,15 பேர் பலி - பதற்றத்தில் பொதுமக்கள்!
இந்தியாவில் தீவிரமடையும் தினசரி கொரோனா பாதிப்பு ,15 பேர் பலி – பதற்றத்தில் பொதுமக்கள்!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிக அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதிகரித்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு:

கடந்த 2 வருடங்களாக உலக மக்களயே கொரோனா தொற்று உலுக்கி வந்தது. இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டாலும், இவை உருமாற்றம் அடைந்து மீண்டும் பரவி வருகிறது. கொரோனாவின் பிறப்பிடம் சீனாவின் வணிக நகரமான வுகான் ஆகும். வுகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா, அதிக பேரழிவை ஏற்படுத்தியது. இருப்பினும் ஜீரோ கோவிட் பாலிசியை சீன அரசு கடைபிடித்து வந்ததால் அந்த தொற்றின் வேகம் கட்டுக்குள் வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீன நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவியது.

TN Job “FB  Group” Join Now

இதனால் சீன அரசு மீண்டும் தடுப்பு நடவடிக்கைகளை கையில் எடுத்தது. இதன் பலனாக ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து சீன அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தளர்வு அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த தொற்று இந்தியாவிலும் தலை தூக்கி உள்ளது. அந்த வகையில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதேபோல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை போனஸ் – விரைவில் 5% அகவிலைப்படியுடன் ஊதிய உயர்வு?

  • அறிக்கையின்படி, புதிதாக 8,822 பேர் பாதித்துள்ளனர்.இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,45,517 ஆக உயர்ந்தது.
  • புதிதாக 15 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,792 ஆக உயர்ந்தது.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 5,718 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,77,088ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.66% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது. மேலும் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.12% ஆக குறைந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 53,637 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் 1,95,50,87,271 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 13,58,607 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!