எட்டுத்தொகை நூல்கள்

0

சங்க இலக்கியங்கள்

  • கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினைச் சங்க காலம் என்பர். இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள். இவர்களால் இயற்றப்பெற்றவை சங்கப் பாடல்கள் எனப்படும்.
  • சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.
  • சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது.
  • சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன.
  • பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன.
  • சங்க இலக்கியங்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள் ,பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

பதினெண் மேற்கணக்கு நூல்கள்

  • பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள்.
  • பதினெண்மேற்கணக்கு நூல்களின் இலக்கணம் கூறும் நூல் பன்னிரு பாட்டியல்.
  • பதினெண் மேற்கணக்கு நூல்கள் இருவகைப்படும்.அவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் ஆகும்.

எட்டுத்தொகை நூல்கள்

  • எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு.இது சங்க இலக்கியம். இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும் பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது.
  • தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்பட்டமையால் தொகை எனப் பெயர் பெற்றது.
  • எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர்.
  • இத்தொகையுள் ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர்.
  • இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற்புலவர்களும் உண்டு.ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102.
  • கலிப்பா வகையால் ஆன நூல் கலித்தொகை.
  • பரிபாட்டு வகையால் ஆன நூல் பரிபாடல்.
  • மற்ற ஆறு நூல்களும் ஆசிரியப்பாவால் ஆனது.
  • எட்டுத்தொகை நூல்களுள் காலத்தால் முந்தியது புறநானூறு.
  • எட்டுத்தொகை நூல்களுள் காலத்தால் பிந்தியது பரிபாடல்,கலித்தொகை.
  • எட்டுத்தொகை நூல்களுள் முதன் முதலாக தொகுக்கப்பட்ட நூல் குறுந்தொகை.

எட்டுத்தொகை நூல்கள் வகை:

அகம்,புறம் மற்றும் இரண்டும் சார்ந்தவை என்று மூன்று வகையாக உள்ளது.

அக நூல்கள்:

  • நற்றிணை
  • குறுந்தொகை
  • அகநானூறு
  • ஐங்குறுநூறு
  • கலித்தொகை

புற நூல்கள்

  • புறநானூறு
  • பதிற்றுப்பத்து

அகமும் புறமும் உடைய நூல்கள்:

  • பரிபாடல்

எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய வெண்பா :

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை

நூல்கள்தொகுத்தவர்தொகுபித்தவர்பாடல் அடி தெய்வம்குறிப்பு
சிறுமை பெருமை
நற்றிணைதெரியவில்லைபன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி912திருமால்இந்நூல் 175 புலவர்களால் பாடப்பட்டதுஇந்த நூலுக்கு திருமால் வணக்கப் பாடல் பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றியது.
குறுந்தொகைபூரிக்கோதெரியவில்லை48முருகன்இந்நூல் 205 புலவர்களால் பாடப்பட்டது. இந்நூலின் முதல் 380 பாடல்களுக்கு பேராசிரியரும், 20 பாடல்களுக்கு நச்சினார்கினியரும் உரை எழுதியுள்ளார்கள்.
ஐங்குறுநூறுபுலத்துறை முற்றிய கூடலூர் கிழார்யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை36சிவன்ஐந்து திணைகளையும் பற்றித் திணை ஒன்றுக்கு 100 பாடல்களாக 500 பாடல்களைக் கொண்டது இந் நூல்.
பதிற்றுபத்துதெரியவில்லைதெரியவில்லை857பத்துச் சேர மன்னர்கள் பற்றிப் பத்துப் புலவர்கள் தலைக்குப் பத்துச் செய்யுள் வீதம் பாடிய 100 செய்யுட்களின் தொகுப்பு இது. இதன் முதற்பத்தும், இறுதிப்பத்தும் அழிவுற்றன.இப்போது 80 செய்யுள்கள் மட்டுமே உள்ளன
பரிபாடல்தெரியவில்லைதெரியவில்லை25400பரிபாடல் என்னும் இசைப்பாக்களால் தொகுக்கப்பட்டதால் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. 70 பாடல்களில் 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதற்கு பரிமேலழகர் உரை எழுதியுள்ளார்.திருமால் மீது 8 பாடல், செவ்வேள் மீது 31, காடுகாள்(கொற்றவை) மீது 1, வையை மீது 26, மதுரை மீது 4 - என்று 70 பாடல்கள் இருந்தன.
கலித்தொகைநல்லந்துவனார்தெரியவில்லை1180சிவன்150 கலிப்பாக்களை கொண்டது.ஒவ்வொரு திணையைப் பற்றியும் ஒரு புலவராக ஐந்து புலவர்களால் பாடப்பட்டது. பாலை-பெருங்கடுங்கோ, குறிஞ்சி - கபிலர், மருதம் - மதுரை மருதனிளநாகனார், முல்லை - சோழன் நலுருத்திரன், நெய்தல் - நல்லத்துவனார்.. உரை எழுதியவர் நச்சினார்க்கினியர்.கலிப்பா வகையால் பாடப்பெற்ற ஒரே தொகை நூல் இதுவே.

அகநானூறுஉருத்திர சன்மனார்பாண்டியன் உக்கிரப்பெருவழுதி1331சிவன்நூலிற்கு முதலில் உரை எழுதியவர் நா.மு.வேங்கடசாமி நாட்டார்.1-120 = களிற்றியானை நிரை
121-300 = மனிமிடைப்பவளம்
301-400 = நித்திலக்கோவை நூலை முதலில் பதிப்பித்தவர் = வே. இராசகோபால் ஐயர் சங்க இலக்கியங்களுள் வரலாற்று செய்திகளை அதிகமாக கூறும் நூல் அகநானூறு.
புறநானூறுதெரியவில்லைதெரியவில்லை440சிவன்புறநானூற்றில் 11 திணைகளும், 65 துறைகளும் கூறப்பட்டுள்ளன. புறநானூற்றில் கூறப்படாத திணை = உழிஞைத் திணை பெண்களின் வீரத்தைக் கூறும் துறை மூதின் முல்லைபுறநானூறில் 10 வகை ஆடைகள், 28 வகை அணிகலன்கள், 30 வகை படைக்கருவிகள், 67 வகை உணவுகள் கூறப்பட்டுள்ளன.

எட்டுத்தொகை நூல்களின் சிறப்பு பெயர்கள்:

வ.எண் எட்டுத்தொகை நூல்கள்வேறு பெயர்கள்
1நற்றிணை1.நற்றிணை நானூறு
2.தூதின் வழிகாட்டி
2குறுந்தொகை1.நல்ல குறுந்தொகை
2.குறுந்தொகை நானூறு
3ஐங்குறுநூறு
4பதிற்றுப்பத்துஇரும்புக் கடலை
5பரிபாடல்1.பரிபாட்டு
2.ஓங்கு பரிபாடல்
3.இசைப்பாட்டு
4.பொருட்கலவை நூல்
5.தமிழின் முதல் இசைபாடல் நூல்
6கலித்தொகை1.கலி
2.குறுங்கலி
3.கற்றறிந்தோர் ஏத்தும் கலி
4.கல்விவலார் கண்ட கலி
5.அகப்பாடல் இலக்கியம்
7அகநானூறு1.அகம்
2.அகப்பாட்டு
3.நெடுந்தொகை
4.நெடுந்தொகை நானூறு
5.நெடும்பாட்டு
6.பெருந்தொகை நானூறு
8புறநானூறு1.புறம்
2.புறப்பாட்டு
3.புறம்பு நானூறு
4.தமிழர் வரலாற்று பெட்டகம்
5.தமிழர் களஞ்சியம்
6.திருக்குறளின் முன்னோடி

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!