அப்போ இது நாடகம் இல்லை போல.. சன் டிவி எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைக்கும் அங்கீகாரம்!

0
அப்போ இது நாடகம் இல்லை போல.. சன் டிவி எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைக்கும் அங்கீகாரம்!
அப்போ இது நாடகம் இல்லை போல.. சன் டிவி எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைக்கும் அங்கீகாரம்!
அப்போ இது நாடகம் இல்லை போல.. சன் டிவி எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைக்கும் அங்கீகாரம்!

பொதுவாகவே சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை எதிர்த்து குரல் கொடுக்கும் சீரியல்கள் மக்கள் மத்தியில் ஹிட் அடித்து விடும். அப்படி ஹிட் அடித்த ஒரு சீரியல் தான் எதிர்நீச்சல்.

எதிர்நீச்சல்:

2003 முதல் 2009 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் திருச்செல்வம். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து தற்போது இவர் எடுக்கும் தொடர் தான் எதிர்நீச்சல். ஒரு பெண் சுதந்திரமாக தன் கருத்துக்களை கூட கூற முடியாத வீட்டில் மருமகளாகும் நாயகி எவ்வாறு அந்த வீட்டில் இருக்கும் ஆணாதிக்கத்தை தகர்த்தெரிகிறாள் என்பதே இதன் மையக்கதை.

Follow our Instagram for more Latest Updates

தற்போது நாயகி ஜனனியின் ஒரே நோக்கம், அந்த வீட்டில் இருக்கும் மூன்று மருமகள்களுக்கு சுதந்திரம் வாங்கி தருவதே. பல இல்லத்தரசிகளின் நன்மதிப்பை தற்போது இந்த சீரியல் பெற்று வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீரியலின் காட்சிகளையும், நடிகர்களையும் பார்க்கும் பொழுது உண்மையான குடும்பம் போலத்தான் உள்ளது என பாராட்டி வருகின்றனர்.

அமுதவாணனிடம் கோவப்பட்ட ADK.. டாஸ்கா? சண்டையா? என குழப்பத்தில் ரசிகர்கள் – பிக்பாஸ் அப்டேட்!

Exams Daily Mobile App Download

மேலும் துளியும் மேக்கப் இல்லாமல் நடிகர்கள் அனைவரும் நடிப்பதாக சமூகவலைத்தளங்களில் புகழ்ந்து வருகின்றனர். குறிப்பாக நாயகி ஜனனியை தாண்டி இந்த தொடரின் மருமகள்களாக நடிக்கும் கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா ஆகியோர் ரசிகர்களின் பேவரைட்டாக மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!