கோமா நிலைக்கு சென்று இறந்த கணவர்.. எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் கலங்க வைக்கும் நிஜ வாழ்க்கை!

0
கோமா நிலைக்கு சென்று இறந்த கணவர்.. எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் கலங்க வைக்கும் நிஜ வாழ்க்கை!
கோமா நிலைக்கு சென்று இறந்த கணவர்.. எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் கலங்க வைக்கும் நிஜ வாழ்க்கை!
கோமா நிலைக்கு சென்று இறந்த கணவர்.. எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் கலங்க வைக்கும் நிஜ வாழ்க்கை!

தற்போது டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் தொடர்களிலேயே பெண்கள் மத்தியில் நல்ல பாப்புலர் ஆகிய சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் நடிகையின் நிஜ வாழ்க்கையில் நடந்த துயர சம்பவம் ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.

எதிர்நீச்சல்:

பொதுவாகவே ஒரு சமூக கருத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் தொடர் மக்கள் மத்தியில் ஹிட் ஆவது வழக்கம். அவ்வாறு பெண் விடுதலையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் தொடர் தான் எதிர்நீச்சல். இயக்குனர் திருச்செல்வம் இயக்கும் இத்தொடரில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஒன்று.

Follow our Twitter Page for More Latest News Updates

அதில் முக்கியமாக சீரியல் தொடக்கத்தில் இருந்து பேசாமல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள பட்டம்மாள் கதாபாத்திரம் ரசிகர்களின் பேவரைட் ஆக மாறியுள்ளது. இவர் சீரியலில் மட்டுமல்ல, நிஜத்திலும் எதிர்நீச்சல் போட்டவர் தான். இவரின் இயற்பெயர் பாம்பே ஞானம். மேடை நாடகத்தில் ஈடுபாடு கொண்ட இவருக்கு முழுக்க முழுக்க துணையாக நின்றது இவரின் கணவர் தானாம். 10 ஆண்டுகளுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக இவருடைய கணவர் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் காய்ச்சல் தொடர்ந்து நீடித்து கொண்டே இருந்து உள்ளது.

தனம் மூர்த்திக்கு சப்ரைஸ் செய்த குடும்பத்தினர்.. நகை வாங்கி கொடுத்த முல்லை, மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பல டெஸ்ட்கள் எடுத்து ஒரு நாளைக்கு ரூ.60,000 செலவில் வைத்தியம் பார்த்துள்ளார் பாம்பே ஞானம். ஒரு கட்டத்தில் இவருடைய கணவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார். பின்னர் ஒரு மாதம் கழித்து கோமாவில் இருந்து மீண்டு ICUக்கு மாற்றப்பட்டு உள்ளார். ஆனால் சில நாட்களிலேயே சிகிச்சை பலனிக்காமல் இவரின் கணவர் இறந்துவிட்டார். அது இவருக்கு பேரிடியாக விழுந்துள்ளது. எதிலும் ஈடுபாடு இல்லாமல் நாடகத்தை விட்டு ஒதுங்கி இருந்துள்ளார். பின்னர் பல வருடங்கள் கழித்து தற்போது எதிர்நீச்சல் தொடரில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இவரின் இந்த நிஜ கதை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!