குணசேகரன் சூழ்ச்சியால் மரண படுக்கையில் அப்பத்தா – எதிர்நீச்சல் அப்டேட்!
சன் டிவியின் பிரைம் டைம் சீரியல் ஆன எதிர்நீச்சல் தற்போது உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டிருக்கிறது.
எதிர்நீச்சல்:
குடும்பத்தின் தலைவனாக இருக்கும் குணசேகரன் தன் குடும்பத்தின் நலனை கருத்தில் கொள்ளாமல் தன் சுயநலம் மற்றும் பணத்தாசைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் குணம் கொண்டவராக இருக்கிறார். தன் சொந்த லாபத்திற்காக தன்னுடன் பிறந்த தம்பிகளையும் தனக்கு ஏற்றார் போல் ஆட்டி வைக்கும் குணம் கொண்ட குணசேகரன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் எதிர்த்து அனைத்து காரியங்களையும் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் 40 சதவீத சொத்துக்காக அப்பத்தாவை என்ன வேண்டுமானாலும் செய்யும் மனநிலைக்கு தற்போது வந்துள்ளார்.
ராணுவ தொழில்நுட்ப துறையில் எக்கச்சக்க காலிப்பணியிடம் – ரூ.1,77,500 வரை சம்பளம்!! உடனே விண்ணப்பிக்கவும்!!
உடல்நிலை சரியில்லாமல் தவித்து வந்த அப்பத்தாவை பெரிய மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்று குணப்படுத்த வேண்டும் என்று வீட்டிலிருந்து அழைத்து செல்கிறார். எங்கு செல்கிறார் என்று யாருக்கும் சொல்லாத காரணத்தினால் அனைவரும் அப்பத்தாவையும் குணசேகரனையும் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் குணசேகரன் அப்பத்தா மரண தருவாயில் உள்ளதால் இறுதியாக வீட்டில் இருப்பது தான் சரியானது என்று அனைவரையும் சரிகட்டி அப்பத்தாவுக்கு சிகிச்சை அளிக்காமல் மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கிறார். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அப்பத்தாவின் நிலையை அறிந்து அவரை காப்பாற்ற ஜனனி அல்லது ஜீவானந்தம் என்ன முடிவெடுக்க போகிறார்கள் என்று அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.