குணசேகரன்-அரசுக்கு இடையில் முற்றும் சண்டை – எதிர் நீச்சலில் என்ன நடக்க போகுது பாருங்க!

0
குணசேகரன்-அரசுக்கு இடையில் முற்றும் சண்டை - எதிர் நீச்சலில் என்ன நடக்க போகுது பாருங்க!
குணசேகரன்-அரசுக்கு இடையில் முற்றும் சண்டை - எதிர் நீச்சலில் என்ன நடக்க போகுது பாருங்க!
குணசேகரன்-அரசுக்கு இடையில் முற்றும் சண்டை – எதிர் நீச்சலில் என்ன நடக்க போகுது பாருங்க!

எதிர்நீச்சல் சீரியல் தற்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதில், அரசு மற்றும் குணசேகரன் இருவருக்கும் இடையிலான சண்டையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

எதிர்நீச்சல்:

சன் டிவியின் பிரைம் நேரத்தில் தற்போது எதிர் நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் மிகவும் திமிர் பிடித்த குணசேகரன் தான் கதையின் போக்கை தீர்மானிக்கும் கதாபாத்திரமாக உள்ளது. இவர் தனது உடன் பிறந்த தங்கையின் வாழ்க்கையை விட சொத்து தான் முக்கிய என்று நினைப்பவர். இதற்காக ஆதிரைக்கு வந்த நல்ல சம்பந்தத்தை விட்டு விட்டு, மோசமான பழக்கங்கள் உள்ள கரிகாலனுடன் திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்.

இந்நிலையில், ஜனனி அருணுடன் ஆதிரைக்கு திருமண ஏற்பாடு செய்ய, இதனை தடுக்க நினைத்து குணசேகரன் அருணை கடத்தி வைக்கிறார். அதன் பிறகு ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணத்தை ஏற்பாடு செய்கிறார். இதனை அறிந்து கொண்ட அரசு, கரிகாலனை கடத்தி வைத்து விட்டு, குணசேகரனுக்கு கால் செய்து விஷயத்தை சொல்கிறார். இதனால் இரண்டு தரப்பிற்கும் இடையில் பெரிய சண்டை வர உள்ளது தெரிகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!