கிடுகிடுவென உயரும் அத்தியாவசிய பொருட்களின் விலை – புலம்பும் பொதுமக்கள்..!

0
கிடுகிடுவென உயரும் அத்தியாவசிய பொருட்களின் விலை – புலம்பும் பொதுமக்கள்..!
கிடுகிடுவென உயரும் அத்தியாவசிய பொருட்களின் விலை – புலம்பும் பொதுமக்கள்..!

கிடுகிடுவென உயரும் அத்தியாவசிய பொருட்களின் விலை – புலம்பும் பொதுமக்கள்..!

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க எந்த ஒரு சிரமும் இருக்காது என்று அரசு அறிவித்திருந்தது. கொரோனா பீதியால் அத்தியாவசியப் பொருட்களின் வரத்து குறைந்ததால் பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை உள்ளது .

லாரி ஓட்டுநர்கள் தயக்கம்:

தமிழகத்தில் இருக்கிற மொத்த விற்பனை அங்காடிகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து மளிகைப் பொருட்கள் கொண்டு வரப்படுகின்றது. அத்தியாவசிய பொருட்களை கொண்டு வர செல்லத் தடை இல்லை என்றாலும், லாரி ஓட்டுநர்கள் வேலைக்கு வர சிறிது யோசிக்கின்றனர்.தற்போது வரத்து குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக மளிகைப் பொருட்கள்,காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

போக்குவரத்து குறைவு டீசல் விலை உயர்வு:

போக்குவரத்து வசதி குறைந்ததாளும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் லாரி வாடகையும் அதிகரிக்கப்பட்டுள்ளதா மளிகை பொருட்களின் விலை 25 சதவீதம் வரை உயர்ந்து இருக்கிறது. அதிலும் அரிசி, சர்க்கரை, பூண்டு ஆகியவற்றின் விலை மட்டும் அதிகளவில் உயர்ந்துள்ளது. அதன்படி, அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களில் வரும் மளிகை பொருட்களின் விலை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்கு முன்பு இருந்த விலையை விட அரிசி, பருப்பு உள்பட சில மளிகை பொருட்களின் விலை 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.வெளி மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம்,குஜராத் மத்திய பிரதேசம், உபி, டெல்லி, சண்டிகர், அரியானா, ராஜஸ்தான் ஆகிய வடமாநிலங்களில் இருந்து துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசி பருப்பு, கடலை பருப்பு, தணியா (கொத்தமல்லி), பூண்டு, புளி, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம் ஆகிய பொருட்களின் விளைய உயர்ந்துள்ளது.

மளிகை பொருட்கள் விலை

கிலோ ரூ.84-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததுவரம் பருப்பு, தற்போது ரூ.102 என்ற நிலையிலும், பாசி பருப்பு ரூ.105-க்கு விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது ரூ.128-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல், ரூ.97-க்கு விற்பனையான உளுந்தம் பருப்பு ரூ.130-க்கும், கடலை பருப்பு ரூ.54-க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.66-க்கும் விற்பனை முன்பு ஒரு கிலோ பூண்டு ரூ.85-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.220 வரை விற்பனை ஆகிறது.ஒரு கிலோ ரூ.35-க்கு விற்பனையான சர்க்கரை, கிலோவுக்கு ரூ.9 அதிகரித்து, ரூ.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மிளகாய் ரூ.145-ல் இருந்து ரூ.180 ஆகவும், அனைத்து ரக அரிசியும் 25 கிலோ மூட்டைக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை உயர்ந்துள்ளது. செய்யப்படுகிறது.மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம் ஆகியவற்றின் விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை உயர்ந்துள்ளது.ரவை இருப்பு இல்லை. அப்படியே இருந்தாலும், அதன் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.28-ல் இருந்து ரூ.45 ஆக உயர்த்தி இருக்கிறார்கள்.

காய்கறி விலை மாற்றம் இலை

கோயம்பேட்டில் ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் 80 ரூபாய் பெரிய வெங்காயம் 26 ரூபாய். கத்தரிக்காய் 30, வெண்டைக்காய் 20 ரூபாய். உருளைக்கிழங்கு 23 ரூபாய், பீட்ரூட் 12 ரூபாய். பீன்ஸ் 90 ரூபாய், காரட் 15 ரூபாய் விற்கப்படுகிறது.காய்கறிகளின் விலையில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும், மளிகை பொருட்களை மொத்த விலைக்கு விற்கும் வியாபாரிகள், சூழ்நிலையைப் பயன்படுத்தி, அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அத்தியாவசியப் பொருட்கள் தங்களுக்கே அடக்க விலைக்கே கிடைப்பதாக கூறும் சில்லறை வியாபாரிகள், மக்களிடம் விற்கும்போது விலை இன்னும் கூடுவதாக கூறுகின்றனர்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here