ESIC 3800+ காலிப்பணியிடங்கள் – 10வது முடித்தவர்களுக்கான அரசு வேலை..!

0
ESIC 3800+ காலிப்பணியிடங்கள் - 10வது முடித்தவர்களுக்கான அரசு
ESIC 3800+ காலிப்பணியிடங்கள் - 10வது முடித்தவர்களுக்கான அரசு

ESIC 3800+ காலிப்பணியிடங்கள் – 10வது முடித்தவர்களுக்கான அரசு வேலை..!

பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Upper Division Clerk (UDC), Stenographer (Steno) and Multi-Tasking Staff (MTS) பதவிகளுக்கு 3847 காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியானவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
ESIC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Upper Division Clerk (UDC), Stenographer (Steno) and Multi-Tasking Staff (MTS) பணிக்கென 3847 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது டிகிரி என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • UDC & Steno பணிக்கு விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • MTS பணிக்கு விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Center – Join Now

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • UDC & Steno பணிக்கு ரூ. 25,500/- முதல் ரூ.81,100/- வரை, MTS பணிக்கு ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • SC / ST / PWD / EX SM / பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/- மற்றும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.500/- என விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ESIC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து 15.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டார்கள். மேலும் 15.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது இப்பணிக்கு நாளையுடன் கால அவகாசம் நிறைவு பெறுவதால் ஆர்வமுள்ளவர்கள் இன்றே தங்களின் பதிவுகளை செய்து கொள்ளவும்.

Open ESIC Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!