ESIC மருத்துவ கல்லூரியில் 30+ காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது…!

0

ESIC மருத்துவ கல்லூரியில் 30+ காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது…!

ESIC மருத்துவ கல்லூரி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Professor, Associate Professor & Assistant Professor பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Professor, Associate Professor & Assistant Professor பணிக்கு மொத்தமாக 34 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MD / MS / DNB பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 69 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், கட்டாயம் விண்ணப்பதாரருக்கு 69 வயதுக்கு உட்பட்ட நபராக இருப்பது அவசியமாகும்.

  • தகுதியும் திறமையும் வாய்ந்த நபர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட பின், பணியின் போது மாதம் ரூ.1,30,797/- முதல் ரூ.2,28,942/- வரை மாத ஊதிய தொகை வழங்கப்படும். மேலும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
  • SC/ST/Regular ESIC விண்ணப்பதாரர்கள் / Female விண்ணப்பதாரர்கள் & Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று தெரிவித்துள்ளது. மேலும் இவர்களை தவிர மற்ற அனைத்து வகுப்பைச் சேர்ந்த பதிவுதாரர்களுக்கும் ரூ.225/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
  • இப்பணிக்கு பதிவுதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் நேர்முகத் தேர்வு குறித்த விவரங்களை அறிவிப்பில் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!