ESIC நிறுவனத்தில் ரூ.78,800/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – 55 காலிப்பணியிடங்கள்..!

0
ESIC நிறுவனத்தில் ரூ.78,800/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 55 காலிப்பணியிடங்கள்..!
ESIC நிறுவனத்தில் ரூ.78,800/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 55 காலிப்பணியிடங்கள்..!
ESIC நிறுவனத்தில் ரூ.78,800/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – 55 காலிப்பணியிடங்கள்..!

தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC) கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Specialist Grade II பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க ஓரிரு நாட்கள் மட்டுமே உள்ளதால் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறவும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

வெளியாகியுள்ள தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பில், Specialist Grade II (Senior Scale) பதவிக்கு என மொத்தமாக 55 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் Post Graduation டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 5 ஆண்டுகள் வரை பணி சார்ந்த துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

விண்ணப்பதாரர்கள் 20.04.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். Specialist Grade II (Senior Scale) பணிக்கு ரூ.78,800/- என்றும் மற்றும் Specialist Grade II (Junior Scale) பணிக்கு ரூ.67,700/- என்றும் மாத ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PwBD / ESIC Employees, Women, & Ex-Servicemen ஆகிய வகுப்பைச் சேர்ந்த நபர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இவர்களை தவிர மற்ற அனைத்து நபர்களுக்கும் ரூ.500/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் மொழி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 20.04.2022 அன்றைய நாள் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும். எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ESIC Notification & Application Link

ESIC Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!