ESIC நிறுவனத்தில் 50 காலியிடங்கள் – ரூ.1,21,048/- மாத ஊதியம் || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
தொழிலாளர்களின் மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Senior Resident, Part Time Super Specialist ஆகிய பணிகளுக்கான 50 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான நேர்காணல் நாளை (16.11.2023) நடைபெறவுள்ளது. எனவே இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ESIC வேலைவாய்ப்பு விவரங்கள் 2023:
- ESIC நிறுவனத்தில் Senior Resident பணிக்கு என 45 பணியிடங்களும், Part Time Super Specialist பணிக்கு என 05 பணியிடங்களும் காலியாக உள்ளது.
- MBBS, MD, MS, DNB ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- 16.11.2023 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது Senior Resident பணிக்கு 44 என்றும், Part Time Super Specialist பணிக்கு 64 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,00,000/- முதல் ரூ.1,21,048/- வரை மாத ஊதியமாக தரப்படும்.
- இந்த ESIC நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் 16.11.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ESIC விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணலுக்கு வரும் போது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து 16.11.2023 அன்று 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.