‘Error 503’ உலகளவில் பிரபல வலைதளங்கள் செயலிழப்பு – முடங்கிய இன்டர்நெட்!

0
'Error 503' உலகளவில் பிரபல வலைதளங்கள் செயலிழப்பு - முடங்கிய இன்டர்நெட்!
'Error 503' உலகளவில் பிரபல வலைதளங்கள் செயலிழப்பு - முடங்கிய இன்டர்நெட்!
‘Error 503’ உலகளவில் பிரபல வலைதளங்கள் செயலிழப்பு – முடங்கிய இன்டர்நெட்!

உலக அளவில் செயல்படும் பல பிரபலமான வலைதளங்கள் அனைத்தும் ஒரு முடக்கத்தை இன்று (ஜூன் 8) எதிர் கொண்டது. அந்த வகையில் பயனாளர்கள் உபயோகிக்கும் ஒவ்வொரு வலைதளங்களின் முகப்பு பக்கங்களிலும் ‘Error 503’ என்ற பிழைகள் தோன்றியுள்ளது.

Error 503:

பொதுவாக ஒரு வலைதளங்களில் நாம் விரும்பும் சேவைகளை பெற முடியாத பட்சத்தில், அதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் ‘Error 503’ என்று முகப்பு பக்க திரையில் தோன்றும். அதாவது நாம் அனுப்பும் கோரிக்கைகளை கையாள அந்த சேவையகம் தாயராக இல்லாத நேரத்தில் அவற்றில் பிழை ஏற்படுவது உண்டு. இப்படிப்பட்ட தடைகளை பல உலக வலைதளங்கள் இன்று (ஜூன் 8) எதிர்கொண்டது. இந்திய வலைதளங்களிலும் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு கல்லூரிகளில் முதலில் மாணவர் சேர்க்கை – காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தல்!!

அதாவது இங்கிலாந்து அரசாங்கத்தின் வலைதளங்கள், ரெடிட், வீடியோ லைவ் ஸ்ட்ரீமிங் ட்விச் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ், பிபிசி நியூஸ், தி பைனான்சியல் டைம்ஸ் மற்றும் தி கார்டியன் போன்ற முக்கிய செய்தி நிறுவனங்களின் வலைதளங்களில் இத்தகைய கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இந்த ‘Error 503’ என்ற பிழைக்கு பின்னாக, நெட்வொர்க் வழங்குநரின் தடுமாற்றம் தான் காரணம் காரணம் என்று கருதப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்த உலகளாவிய முடக்கம் மூலம் பிசினஸ் இன்சைடர் மற்றும் இம்கர் உள்ளிட்ட ஃபாஸ்ட்லியின் சில வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளாவிய CDN சீர்குலைவு என்று கருதப்படும் இந்த பிரச்சனையை தொடர்ந்து விசாரித்து வருவதாக, சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்ட ஃபாஸ்ட்லி தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த செயலிழப்பு எதனால் ஏற்பட்டது என்பதற்கு உறுதியான காரணங்கள் கொடுக்கப்படவில்லை. மேலும் Error 503 தடைகள், இந்திய நேரப்படி பிற்பகல் 3.14 மணியளவில் அதிகரித்ததாக கூகிள் ட்ரெண்ட் தரவுகள் தெரிவிக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!