EPFO பயனர்களுக்கு சூப்பர் வாய்ப்பு – வீட்டுக்கடன், குழந்தைகள் கல்விக்கு உதவித்தொகை!

0
EPFO பயனர்களுக்கு சூப்பர் வாய்ப்பு - வீட்டுக்கடன், குழந்தைகள் கல்விக்கு உதவித்தொகை!
EPFO பயனர்களுக்கு சூப்பர் வாய்ப்பு - வீட்டுக்கடன், குழந்தைகள் கல்விக்கு உதவித்தொகை!
EPFO பயனர்களுக்கு சூப்பர் வாய்ப்பு – வீட்டுக்கடன், குழந்தைகள் கல்விக்கு உதவித்தொகை!

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, பல்வேறு காரணங்களுக்காக திரும்ப செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத வகையில் தொழிலாளர்களின் வைப்பு நிதியில் இருந்து முன்கூட்டியே உதவித்தொகை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

EPFO அறிவிப்பு:

வருங்கால வைப்பு நிதி என்பது பணியாளர்கள் வாங்கும் மாத சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பணியாற்றும் நிறுவனம், அதற்கு சமமான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும். இது தான் வருங்கால வைப்பு நிதி ஆகும். இதில் 8.33 சதவீதம் பென்சன் திட்டத்திற்கும், 3.7 சதவீதம் வருங்கால வைப்பு நிதியாகவும், 0.50 சதவீதம் ஊழியர்களின் காப்பீட்டிற்கும் செலுத்தப்படும்.

3 நாட்கள் அரசு பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு – மாணவர்கள், ஆசிரியருக்கு கொரோனா தொற்று!

ஊழியர்கள் தங்கள் பணிக்காலம் முடியும் போது அல்லது பணியில் இருந்து விலகும் போது அந்த வைப்பு தொகையை பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில், ஈபிஎஃப் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஊழியர்கள் வீட்டுக்கடன், தொழிற்சாலை மூடல், குடும்ப உறுப்பினரின் நோய், சுய / மகன் / மகள் / சகோதரர் / சகோதரி திருமணம், குழந்தைகளின் மெட்ரிகுலேஷன் கல்வி, இயற்கை பேரிடர், மின்சாரம் துண்டிப்பு, உடல் ஊனமுற்றோர்க்கு உபகரணங்கள் வாங்குவது, ஓய்வுக்கு ஒரு வருடம் முன்பு வரிஸ்தா பென்ஷன் பிமா யோஜனா ஆகிய காரணங்களுக்காக திருப்பிச் செலுத்த அவசியம் இல்லாத வகையில், ஈபிஎஃப் அட்வான்ஸ் தொகைக்கு விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்துள்ளது.

கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – விரைவில் அனுமதி!

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியில் தங்கள் ஈபிஎஃப் கணக்குகளில் இருந்து முன்கூட்டியே தங்களின் வைப்பு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால் பணம் திரும்பப் பெறப்பட்டால், ஊழியர் தனது ஈபிஎஃப் கணக்கு எண்ணை (UAN) பயன்படுத்த வேண்டும். இந்த முறையில் பணம் பெற ஊழியர் தங்களது ஆதார், பான் மற்றும் வங்கி கணக்கு ஆகியவை யுஏஎன்வை இணைந்திருக்க வேண்டும். பணத்தை திரும்ப பெற விரும்பும் நபர், தனது ஈபிஎஃப் கணக்கிலிருந்து பணம் கேட்டு முன்கூட்டியே ஆணையருக்கு ஒரு விண்ணப்பத்தை எழுத வேண்டும். இதனை நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான அதிக விவரங்களை epfindia.gov.in என்ற அதிகாரபூர்வ இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!