இந்த 6 வங்கி வாடிக்கையாளர்களுக்கு EPFO முக்கிய அறிவிப்பு – IFSC கோட் புதுப்பிப்பு!
இந்தியாவில் வங்கிகள் இணைப்பு காரணமாக 6 வங்கி பயனர்களின் IFSC கோட் மாறியுள்ளது. இதனை ஆன்லைன் மூலம் புதுப்பிக்கும் முறை வெளியிடப்பட்டுள்ளது.
IFSC கோட் மாற்றம்:
இந்தியாவில் சமீபத்தில் பெரிய பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டது. இது பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது. இதனால் ஆந்திர வங்கி, அலகாபாத் வங்கி, யுனைடெட் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஓரியண்டல் வங்கி, போன்ற வங்கிகளின் IFSC கோட் எண் மாற்றமடைந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்களும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது.
ஜூலை 15 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி விவரங்களை தங்கள் PF கணக்கில் புதுப்பிக்க வேண்டும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. வங்கிகள் இணைப்பால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் IFSC கோட் முடங்கியுள்ளது. அதனால் ஆந்திர வங்கி, அலகாபாத் வங்கி, யுனைடெட் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஓரியண்டல் வங்கி, சிண்டிகேட் வங்கி போன்ற வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் IFSC புதுப்பிக்க வேண்டும்.
IFSC கோட் புதுப்பிக்கும் முறைகள் :
- https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் உங்கள் பாஸ்வேட்டை உள்ளீடு செய்து Login செய்யவும்.
- பிறகு Manage என்பதை கிளிக் செய்து kyc விருப்பத்தை தேர்வு செய்யவும்.
TN Job “FB Group” Join Now
- அதில் வங்கியை தேர்வு செய்து அதில் உங்கள் வங்கி கணக்கு என்னை 2 முறை சரியாக உள்ளீடு செய்யவும்.
- பிறகு உங்கள் IFSC Code Number ரை உள்ளீடு செய்து SAVE கொடுக்கவும்.
- இறுதியாக உங்கள் வங்கி விவரம் புதுப்பிக்கப்படும்.