EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – மோசடி கும்பல்களிடம் இருந்து பணத்தை பாதுகாப்பது எப்படி? முழு விவரம்!

0
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - மோசடி கும்பல்களிடம் இருந்து பணத்தை பாதுகாப்பது எப்படி? முழு விவரம்!
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - மோசடி கும்பல்களிடம் இருந்து பணத்தை பாதுகாப்பது எப்படி? முழு விவரம்!
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – மோசடி கும்பல்களிடம் இருந்து பணத்தை பாதுகாப்பது எப்படி? முழு விவரம்!

EPF உறுப்பினர்களுக்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) எச்சரிக்கை தகவல் ஒன்றை ட்விட்டரில் பதிவு செய்து உள்ளது. அந்த பதிவில் மோசடி கும்பல்களிடம் இருந்து தங்கள் பணத்தை உறுப்பினர்கள் எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை தெரிவித்து உள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

எச்சரிக்கை பதிவு:

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) சந்தாதாரர்களை மோசடி செய்பவர்களிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) எச்சரித்துள்ளது. EPFO வெளியிட்ட ட்விட்டர் பதிவில், EPFO ஆனது ஆதார், பான், யுஏஎன், வங்கி கணக்கு, தொலைபேசி, சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் OTP போன்ற தனிப்பட்ட விவரங்களை ஒருபோதும் கேட்பதில்லை என்று கூறியுள்ளது. எந்தவொரு சேவைகளுக்கும், வாட்ஸ்அப், சமூக ஊடகங்கள் போன்றவற்றின் மூலம் எந்தப் பணத்தையும் டெபாசிட் செய்ய EPFO ஒருபோதும் கேட்பதில்லை. PF உறுப்பினர்களுக்கு அத்தகைய அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய நிலை இது தான்? ரசிகர்கள் ஷாக்!

மத்திய டிரஸ்டி அமைப்பு 2021-22 ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதங்களை 8.5% இலிருந்து 8.1% ஆகக் குறைக்க பரிந்துரை செய்தது, இந்த வட்டி விகிதம் குறைப்பு மாத சம்பளக்காரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களைக் குறைக்கும் திட்டத்தை ஆதரித்தார்.சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு 7.6 சதவீதம், மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதம், பிபிஎப் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.1 சதவீதம் இதனால் பிஎப் வைப்பு நிதிக்கு மற்ற சிறு சேமிப்புத் திட்டத்தைக் காட்டிலும் அதிகப்படியான வட்டி வருமானம் தொடர்ந்து கிடைக்கிறது என மற்ற திட்டங்களின் ஒப்பீட்டு நடைமுறையில் உள்ள வட்டி விகிதங்களை நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டினார்.

மத்திய அரசு கடந்த 40 வருடத்தில் இல்லாத வகையில் பிஎப் வைப்புக்கான வட்டி விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் குறைத்து வெறும் 8.1 சதவீதம் என்ற குறைவான வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் மாத சம்பளக்காரர்கள் அதிக அளவுக்கு நஷ்டத்தை எதிர்கொள்கிறார்கள். மேலும் EPFO ஜனவரி 2022 இல் 15.29 லட்சம் நிகர சந்தாதாரர்களை சேர்த்துள்ளது. முந்தைய மாதத்தின் நிகர சேர்த்தல்களுடன் ஒப்பிடுகையில், 2022 ஜனவரியில் 2.69 லட்சம் நிகர சந்தாதாரர்களின் கூடுதல் அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்த மாதத்தில் சேர்க்கப்பட்ட மொத்த 15.29 லட்சம் நிகர சந்தாதாரர்களில், சுமார் 8.64 லட்சம் புதிய உறுப்பினர்கள் முதல் முறையாக EPF & MP சட்டம், 1952 இன் சமூகப் பாதுகாப்பு வரம்பில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!