EPFO அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – ஓய்வூதியம் குறித்த பல நன்மைகள் அறிவிப்பு!

0
EPFO அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு - ஓய்வூதியம் குறித்த பல
EPFO அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு - ஓய்வூதியம் குறித்த பல

EPFO அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – ஓய்வூதியம் குறித்த பல நன்மைகள் அறிவிப்பு!

இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்கள் PF மற்றும் ஓய்வூதியத்தை ஆன்லைனில் செலுத்த முடியும். தகுதியான நாமினிகளுக்கு ரூ.7 லட்சம் வரை காப்பீடு அளிக்கப்படும் என்று EPFO சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

PF:

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு அந்த நிறுவனங்கள் சார்பாக பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்து வருகிறது. இந்த தொகை அவர்கள் பெறும் ஊதியத்தை பொறுத்தது. இந்த தொகை பணி காலம் நிறைவடைந்த பின் மொத்தமாக நமக்கு திரும்ப கிடைக்கும். தற்போது தேவைக்கேற்ப தொகையை பணி காலத்திலேயே எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. ஆனாலும் இந்த பி எப் தொகையை முழுவதுமாக எடுத்தால் மட்டும் தான் அது ஊழியர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இந்த நிலையில் EPFO அமைப்பு அவ்வவ்போது பிஎப் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

தமிழக கலெக்டர் அலுவலகத்தில் வேலை – சம்பளம்: ரூ.30,000/-

இந்த நிலையில் PF கணக்கு வைத்திருப்பவர்கள், மின்னணு முறையில் நாமினேஷனை தாக்கல் செய்வதன் மூலம் தொந்தரவு இல்லாத மற்றும் விரைவான ஆன்லைன் சேவைகளையும் ரூ.7 லட்சம் வரை காப்பீட்டையும் பெறலாம். EPF ONLINE NOMINATION செய்தால் உறுப்பினர் இறந்தவுடன் ஆன்லைன் உரிமைகோரல் முறையில் தீர்வு அளிக்கப்படும். காகிதமற்ற மற்றும் விரைவான கோரிக்கை முறையில் தீர்வு காணப்படும். PF மற்றும் ஓய்வூதியத்தை ஆன்லைனில் செலுத்த முடியும். தகுதியான நாமினிகளுக்கு ரூ.7 லட்சம் வரை காப்பீடு அளிக்கப்படும்.

மேலும் ஜனவரி 2022 இல் EPFO 15.29 லட்சம் சந்தாதாரர்களை சேர்த்துள்ளது. மாதந்தோறும் சம்பளப்பட்டியல் தரவுகளை ஒப்பிடுகையில், கடந்த ஜனவரியில் 15.29 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகமாகும். இதனை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 8.64 லட்சம் புதிய உறுப்பினர்கள் EPF & MP சட்டம், 1952 இன் சமூகப் பாதுகாப்பு வரம்பில் முதல் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!