EPFO ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – இந்த தேதிக்குள் பணம் கிடைக்கும்? விதியில் பெரிய மாற்றம்!

0
EPFO ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - இந்த தேதிக்குள் பணம் கிடைக்கும்? விதியில் பெரிய மாற்றம்!
EPFO ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - இந்த தேதிக்குள் பணம் கிடைக்கும்? விதியில் பெரிய மாற்றம்!
EPFO ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – இந்த தேதிக்குள் பணம் கிடைக்கும்? விதியில் பெரிய மாற்றம்!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பின் கீழ் ஓய்வூதியம் பெறும் ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் இந்த குறிப்பிட்ட நாளுக்குள் பணம் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

ஓய்வூதியம் விதி

தற்போது ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறுவதில் மேற்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுவாக மாத ஊதியம் பெறும் ஒவ்வொருவரும் EPS கொள்கை வரம்பின் கீழ், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பில் இருந்து ஓய்வூதியமாக ஒரு குறிப்பிட்ட அளவு நிதியை பெற்றுக்கொள்கின்றனர். இருப்பினும், சமீபத்தில் EPFO அமைப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பது குறித்த வழிகாட்டுதல்களை திருத்தியுள்ளது.

தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா உறுதி – பொதுமக்கள் அதிர்ச்சி!

இது தொடர்பாக EPFO அமைப்பு கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாட்களில் ஓய்வூதியம் பெறுபவர்களது கணக்கில் ஓய்வூதியம் வரவு வைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போதுள்ள ஒப்பந்தத்தின் படி, ஒவ்வொரு மாதமும் முதல் வேலை நாளன்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நிதி வரவு வைக்கப்படும் என்றும் இந்த சேவைகளை வழங்குவதில் ஒரு சில வேளைகளில் தாமதம் ஏற்பட்டால் இத்தொகை 5வது வேலை நாளுக்கு முன்னதாக அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜன.26ம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இருப்பினும் கடந்த ஜனவரி 13ம் தேதியிட்ட சுற்றறிக்கையின் படி, RBI அறிவுறுத்தலின் கீழ் சம்பந்தப்பட்ட துறைகள் இந்த விஷயம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலகங்களும், அந்தந்த மாதங்களுக்கான BRS தொகையை அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இதனை கருத்தில் கொண்டு ஓய்வூதியத்திற்காக காத்திருக்கும் ஒவ்வொரு பயனாளர்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் பணத்தொகை கிடைப்பதை துறை அலுவலகங்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தவிர, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருப்பதை போல, EPFல் கணக்கு வைத்திருக்கும் மாத ஊதியம் பெறும் ஒவ்வொரு ஊழியர்களும் EPS திட்டத்தில் சேருவதற்கும் தகுதியுடையவர்கள் ஆவர். அந்த வகையில் அடிப்படை ஊதியத்துடன் ரூ.15,000 வரை அல்லது அதற்கு கீழ் அகவிலைப்படி (DA) தொகையை பெறும் ஒவ்வொரு ஊதியதாரர்களும் பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) சேர வேண்டியது அவசியம் ஆகும். இந்த EPS திட்டம், அனைத்து தனியார் அலுவலக ஊழியர்களும் 58 வயதில் ஓய்வூதியம் பெறுவதை உறுதி செய்கிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!