EPFO அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – இனி வேலையை விட்டு போனால் எல்லாம் ஈஸி!

0
EPFO அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு - இனி வேலையை விட்டு போனால் எல்லாம் ஈஸி!
EPFO அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு - இனி வேலையை விட்டு போனால் எல்லாம் ஈஸி!
EPFO அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – இனி வேலையை விட்டு போனால் எல்லாம் ஈஸி!

இந்தியாவில் பணியாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி கணக்குதாரார்கள் பணி புரியும் நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதற்கான எக்ஸிட் தேதியை, சுயமாக ஆன்லைனில் அப்டேட் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிஎப் கணக்கு:

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு அந்த நிறுவனங்கள் பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாதம் அவர்கள் பெறும் சம்பளத்தை பொறுத்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொகை அவர்கள் வாங்கும் சம்பளத்தை பொறுத்து பிடித்தம் செய்யப்படும். கடந்த ஆண்டு முதல் பரவி வரும் கொரோனாவால் மக்கள் வேலையிழந்து பொருளாதார நெருக்கடி நிலையில் ஏராளமானோருக்கு பிஎஃப் தொகை உதவியது. இந்த பிஎப் தொகையின் வட்டி தொகை 8.5% அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதம் மற்ற வங்கிகளை காட்டிலும் அதிகம்.

DRDO நிறுவனத்தில் 150 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, விண்ணப்ப பதிவு! முழு விபரம் இதோ!

பிஎப் கணக்கு வைத்திருக்கும் நபர் அவர் பணி புரியும் நிறுவனத்தில் இருந்து விலகியதும் வெளியேறிய தேதியை கணக்கு விவரங்களில் குறிப்பிட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. புறப்பாடு தேதி என்பது விலகிய நாளில் இருந்து இரண்டு நாளுக்கு மேல் இருக்க வேண்டும் என்ற விதிமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது. தற்போது புறப்பாடு தேதி என்பது, முந்தைய நிறுவனம் கடைசியாக உங்களுக்கு ஊதியம் வழங்கிய மாதத்தில் இருந்து எந்த நாளாகவும் இருக்கவும். ஆன்லைனில் எக்ஸிட் தேதியை நீங்களே குறிப்பிடலாம். எக்ஸிட் தேதியை மாற்றுவதற்கான எல்லோரை வழிமுறைகள் கீழ்வருமாறு

  • முதலில் Https://Unifiedportal-Mem.Epfindia.Gov.In/Memberinterface/ என்ற இணையதளத்தில் கணக்கு எண் மற்றும் பாஸ்வோர்டு பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
  • மேனேஜ் என்பதை கிளிக் செய்து அதில் செலக்ட் எம்ப்ளாய்மெண்ட் என்ற டிராப்டவுனில் பிஃப் அக்கவுண்ட் நம்பர் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில் வரும் பக்கத்தில் கேட்பதும் இடத்தில் எக்ஸிட் தேதி மற்றும் அதற்கான காரணத்தை குறிப்பிடவும்.
  • இறுதியாக இ-மெம்பர் சேவை தளத்தில் சென்று ’வியூவ்’ மெனுவில் சர்வீஸ் ஹிஸ்டரி என்பதில் எக்ஸிட் தேதி அப்டேட் செய்யப்பட்டு விட்டதா என்பதை தெரிந்து கொள்ளலாம். அப்டேட் செய்த பிறகு அதை மாற்ற இயலாது.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!