PF பயனாளர்கள் கவனத்திற்கு – டிஜிட்டல் முறையில் EPF & EPS நியமனம்!

0
PF பயனாளர்கள் கவனத்திற்கு - டிஜிட்டல் முறையில் EPF & EPS நியமனம்!
PF பயனாளர்கள் கவனத்திற்கு - டிஜிட்டல் முறையில் EPF & EPS நியமனம்!
PF பயனாளர்கள் கவனத்திற்கு – டிஜிட்டல் முறையில் EPF & EPS நியமனம்!

மாத ஊதியம் பெறும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தங்களது PF சந்தாதாரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதற்காக டிஜிட்டல் முறையில் EPF, EPS நியமனம் செய்யும் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

EPS நியமனம்

வருங்கால வைப்பு நிதி அமைப்பின் PF சந்தாதாரர்கள் தங்கள் இ-நாமினேஷனை நிரப்புமாறு EPFO அமைப்பு கேட்டுகொண்டுள்ளது. அதாவது PF சந்தாதாரர்களது குடும்ப உறுப்பினர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இ-நாமினேஷனை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக EPFO அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘PF உறுப்பினர்கள் தங்கள் குடும்பங்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதற்காக இன்று இ-நாமினேஷனை தாக்கல் செய்ய வேண்டும்.

TN TRB 2,331 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் – நேர்முகத் தேர்வு நடத்த கோரிக்கை!

EPF/EPS நாமினேஷன் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்ய இந்த எளிதான வழிமுறைகளைப் பின்பற்றவும்’ என குறிப்பிட்டு EPF மற்றும் EPS பரிந்துரைகளை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான வழிகாட்டுதல் வீடியோவையும் EPFO அமைப்பு பகிர்ந்துள்ளது. அந்த வகையில் பயனர்கள் தங்களது இ-நாமினேஷனை தாக்கல் செய்ய:

  • முதலில் epfindia.gov.in  என்ற EPFO இணையதளத்தை திறக்கவும்.
  • அதில் Service ஆப்ஷனுக்கு சென்று For Employees என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • பிறகு Service ஆப்ஷனில் Member UAN/Online Service (OCS/OTCP) என்பதை கிளிக் செய்யவும்.
  • உங்களுடைய UAN எண் மற்றும் கடவுச்சொல்லை பதிவிடவும்.
  • Manage என்பதன் கீழ் E-Nomination என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் குடும்ப அறிவிப்பை புதுப்பிக்க Yes என்று கொடுக்கவும்.

அக்.18 முதல் 9 – 12 வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில பணிக்குழு முக்கிய முடிவு!

  • இதில் Add Family Details என்பதைக் கிளிக் செய்து, Nomination Details என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அறிவிப்புக்குப் பிறகு Save EPF Nomination என்பதைக் கிளிக் செய்யவும்.
  • OTP ஐ உருவாக்க E-sign ஐ கிளிக் செய்யவும்.
  • ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும்.
  • OTP ஐ சமர்ப்பித்தவுடன் உங்கள் E- நியமனம் இப்போது EPFO இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • ஒரு EPFO சந்தாதாரர் அதன் e- நாமினேஷனில் ஒன்றுக்கும் மேற்பட்ட நியமனங்களை சேர்க்கலாம்.
  • இந்த EPF, EPS நியமனத்தை டிஜிட்டல் முறையில் சமர்ப்பித்த பிறகு, ஆவணங்களை நேரடியாக செலுத்த தேவையில்லை.
  • இந்த செயல்முறை முறையாக நிறைவடைந்தவுடன், பரிந்துரைக்கப்பட்டவரின் பெயர், பிறந்த தேதி போன்ற பிற விவரங்கள் ஆன்லைனில் புதுப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!