ENG Vs IND: இங்கிலாந்தை எதிர்த்து இந்தியா அபார வெற்றி – லார்ட்ஸில் புதிய சாதனை!

0
ENG Vs IND: இங்கிலாந்தை எதிர்த்து இந்தியா அபார வெற்றி - லார்ட்ஸில் புதிய சாதனை!
ENG Vs IND: இங்கிலாந்தை எதிர்த்து இந்தியா அபார வெற்றி - லார்ட்ஸில் புதிய சாதனை!
ENG Vs IND: இங்கிலாந்தை எதிர்த்து இந்தியா அபார வெற்றி – லார்ட்ஸில் புதிய சாதனை!

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே லார்ட்ஸில் நாடாகும் 5 நாட்கள் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வரலாற்று வெற்றியை அடைந்துள்ளது.

அபார வெற்றி:

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கியது. ஆட்டத்தின் 5 வது நாளான இன்று முதலில் இந்திய அணியின் முகமது ஷமி மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ராவும் இணைந்து ஆட்டத்தை அதிரடியாக தொடங்கினார்கள்.இன்றைய போட்டியில் இருவரும் இணைந்து 77 ரன்கள் எடுத்தனர். முன்னதாக இரண்டாவது இன்னிங்ஸ்ல் இந்தியா 154 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் இழந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை தொடங்கினார்கள்.

அக்டோபர் 1ம் தேதி முதல் செக் செல்லாது – இந்தியன் வங்கி அறிவிப்பு!

இந்திய கேப்டன் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிராக 272 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் அதிகப் பந்துகளை சந்தித்திருக்கும் பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் ஆவார். ஜோ ரூட் 60 பந்துகளுக்கு 33 ரன்களை எடுத்து இருந்தார். இந்நிலையில், பும்ரா வீசிய பந்தை ரூட் அடிக்க அந்த பந்து விக்கெட்டாக மாறியது. விராட் கோலி அந்த பந்தை கேட்ச் பிடித்து ரூட்டின் விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் இந்திய வீர்ரகள் அதிக மகிழ்ச்சியில் இருந்தனர்.

TN Job “FB  Group” Join Now

தொடர்ந்து, ஜாஸ் பட்லர் 63 பந்துகளுக்கு 9 ரன்கள் அடித்து அணியை காப்பாற்ற போராடினார். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, இஷாந்த், சிராஜ் மூவரும் தலா இரண்டு விக்கெட்கள் எடுத்தனர். முகமது ஷமி 1 விக்கெட் எடுத்தார். 27 வயதான இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் ஓலி ராபின்சனுக்கு இது மூன்றாவது டெஸ்ட் போட்டியாகும். ஸ்லோ பால் மூலம் ஓலி ராபின்சனை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழக்க வைத்தார் பும்ரா. ஓலி ராபின்சன் 35 பந்துகளை 9 ரன்கள் எடுத்தார்.

 

நாளை அறிமுகமாகும் மோட்டோரோலா Edge 20 மற்றும் Edge 20 Fusion – அசரவைக்கும் அம்சங்கள்!

இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இங்கிலாந்து இழந்தது. ஜேம்ஸ் ஆண்டர்சனை க்ளீன் போல்டாக்கி இந்தியாவை வெற்றிபெறவைத்திருக்கிறார் முகமது சிராஜ். இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் 4 விக்கெட்களை சிராஜ் எடுத்திருக்கிறார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் தனது சாதனை வெற்றியை அடைந்திருக்கிறது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணியின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!