இங்கிலாந்து மகாராணி எலிசபெத் இறப்பிற்கு பின்னர்..? கசிந்த பிரிட்டிஷ் அரசின் திட்டம்!

0
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் இறப்பு? - கசிந்த பிரிட்டிஷ் அரசின் திட்டம்!
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் இறப்பு? - கசிந்த பிரிட்டிஷ் அரசின் திட்டம்!
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் இறப்பிற்கு பின்னர்..? கசிந்த பிரிட்டிஷ் அரசின் திட்டம்!

உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத். அவர் இறந்த பிறகு செய்ய வேண்டியவை குறித்து முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளது. அது குறித்த ஆவணம் தற்போது முதல் முறையாக கசிந்துள்ளது.

இங்கிலாந்து மகாராணி:

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு வயது 95. தற்போது வரை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வருகிறார். ஆனால் ஒருவேளை இங்கிலாந்து மகாராணி காலமானால் அவரது இறுதிச்சடங்கு எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதை பிரிட்டிஷ் அரசு ஆவணப்படுத்தி வைத்திருப்பதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் `பொலிட்டிகோ’ என்கிற அரசியல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் விளக்கம்!

‘ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ்’ என்னும் குறியீட்டில் உருவாக்கப்பட்டுள்ள அந்த டாக்குமென்ட்டில் இங்கிலாந்து மகாராணி மறையும் நாளை ‘கறுப்பு நாள்’ என்று அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வரலாற்றில் மிக நீண்டகாலம் அரசியாக சேவை செய்த இங்கிலாந்து மகாராணி மறைந்தால் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அரசியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்குள் அடுத்த அரசராக பட்டம் சூட்டப்படவிருக்கும் இளவரசர் சார்லஸ் யுனைடெட் கிங்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக அரசு நல்லாசிரியர் விருது 2021 – கோவையில் 13 ஆசிரியர்கள் தேர்வு!

மேலும் மகாராணியின் மறைந்த உடலானது பாராளுமன்றத்தில் மூன்று நாட்கள் வைக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் மறைந்த ராணி அவர்களை காண வருவார்கள் என்பதால் அதனை ஒழுங்காக நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!