ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம், ஏப்.1 முதல் பரிசோதனை நிறுத்தம் – பிரதமர் அறிவிப்பு!

0
ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம், ஏப்.1 முதல் பரிசோதனை நிறுத்தம் - பிரதமர் அறிவிப்பு!
ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம், ஏப்.1 முதல் பரிசோதனை நிறுத்தம் - பிரதமர் அறிவிப்பு!
ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம், ஏப்.1 முதல் பரிசோதனை நிறுத்தம் – பிரதமர் அறிவிப்பு!

இங்கிலாந்து நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தாக்கம் குறைந்து வருவதால், அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தபடுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து உள்ளார். மேலும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனையை நிறுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.

பிரதமர் அறிவிப்பு:

கொரோனா வைரஸ் சீனா நாட்டில் வுஹான் நகரில் முதன் முறையாக பரவ தொடங்கின. இந்த வைரஸ் கடந்த 2 வருடங்களாக பல்வேறு நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டறியப்பட்டு அனைத்து நாடுகளிலும் உள்ள பொதுமக்களுக்கும் செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா தாக்கம் குறைய தொடங்கின. இதனை தொடர்ந்து ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் தென் ஆப்பிரிக்காவிலுருந்து பரவ தொடங்கின.

மார்ச் 11ம் தேதி காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

இந்த ஓமைக்ரான் பரவல் காரணமாக மீண்டும் தொற்று பாதித்த நாடுகளில் தடுப்பு விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்த வகையில் இங்கிலாந்து நாட்டில் ஓமைக்ரான் பாதிப்பு அதிகரித்த நிலையில் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மீண்டும் கொண்டு வரபட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால், அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜான்சன், கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாகவும், ஏப்ரல்1ம் தேதி முதல் பொதுமக்களுக்கு பரிசோதனையை நிறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

குடியரசு தின அலங்கார ஊர்திகள் – ஒருவார காலம் பொது மக்கள் பார்வைக்கு வைக்க உத்தரவு!

இந்த அறிவிப்பு அடிப்படையில் எதிர்கால கொரோனா மாறுபாடுகளை சமாளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் மற்றும் மற்றவர்களிடம் கரிசனையுடன் இருக்குமாறு மக்களை கட்டாயப்படுத்த நாங்கள் முடிவு செய்து உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் நடைமுறை ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் ஒருவருக்கொருவர் பொறுப்புணர்வை கொண்டிருந்து, அன்புக்குரியவர்களை கொரோனா தொற்று ஏற்படுவதில் இருந்து காக்க வேண்டும் என்றும் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here