ENG vs IND 5வது டெஸ்ட் – தொடரை வெல்லுமா இந்தியா? சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு?

0
ENG vs IND 5வது டெஸ்ட் - தொடரை வெல்லுமா இந்தியா? சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு?
ENG vs IND 5வது டெஸ்ட் - தொடரை வெல்லுமா இந்தியா? சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு?
ENG vs IND 5வது டெஸ்ட் – தொடரை வெல்லுமா இந்தியா? சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு?

நாளை மான்செஸ்டரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பின் தொடரை வெல்லுமா என ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் நிலவி வருகிறது.

டெஸ்ட் தொடர்:

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி டிராவில் முடிந்தது. 2வது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3வது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தும், 4வது போட்டியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் இந்திய அணி தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.

ICC Men’s T20 World Cup 2021 – 15 வீரர்கள் கொண்ட வங்கதேச அணி அறிவிப்பு!

கடைசியாக கடந்த 2007ம் ஆண்டு டிராவிட் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றிருந்தது. இந்த டெஸ்டை டிரா செய்தாலே தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி 14 ஆண்டுகளுக்கு பின் வென்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் மான்செஸ்டர் மைதானத்தில் விளையாடிய நிலையில் இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – கல்வி பாதிப்பு!

கடந்த 4 போட்டிகளில் சரியாக விளையாடாத காரணத்தால் ரஹானேவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால் விஹாரி, சூர்யகுமார் யாதவ் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓவர்லோடு வழங்கப்படுவதால், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஷமி அழைக்கப்படலாம் என்று உலகக் கோப்பை வருவதால், அதை கருதி பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளாக அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் கடைசி போட்டியிலும் வாய்ப்பு கிடைப்பதற்கான அறிகுறி ஏதும் காணப்படவில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!