இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கட்டண உயர்வு – AICTE வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கட்டண உயர்வு - AICTE வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கட்டண உயர்வு – AICTE வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் AICTE கட்டண உயர்வை அறிவித்து அதற்கான பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கட்டண உயர்வு

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. அத்துடன் பொறியியல் படிப்பு சார்ந்த வேலைவாய்ப்புகளும் குறைவாகவே உள்ளது. அதன் விளைவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொறியியல் கல்லூரிகள் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சில பொறியியல் கல்லூரிகள் நஷ்டத்தினால் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் – வலுக்கும் கோரிக்கை!

அதனால் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி அடுத்த கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பொறியியல் படிப்பில் சேர உள்ள மாணவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் AICTE ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TCS, HCL, Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – Work From Home முடிவுக்கு வருமா?

அதாவது பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக புதிய கட்டண விகிதத்தை AICTE வெளியிட்டுள்ளது.மேலும் இதில் நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் B.E, B.Tech, B.Arch உள்ளிட்ட படிப்புகளுக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.79,600 என்றும் அதிகபட்சமாக ரூ.1,89,800 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று AICTE அறிவித்துள்ளது. இதனால் பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் விகிதம் குறையும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!