போராடி வெளியேறியது பாகிஸ்தான்.. இங்கிலாந்து ஆறுதல் வெற்றி!!
உலகக் கோப்பை தொடரின் கடைசிக்கு முந்தைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் மிகப்பெரிய வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்ற நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. பென் ஸ்டோக்ஸ் (84), ஜோ ரூட் (60), பேர்ஸ்டோ (59) ஆகியோரின் அதிரடியால் இங்கிலாந்து அணி 50 ஓவரில் 337 ரன்கள் விளாசியது.
ரூ.603 க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்..உயரும் சிலிண்டர் மானியம் – அரசின் மாஸ்டர் பிளான்!
அதனை தொடர்ந்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அகா சல்மான் 51 ரன்களும், பாபர் அசாம் 38 ரன்களும், முகமது ரிஸ்வான் 36 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொதப்ப 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது. ஆனாலும் இங்கிலாந்து & பாகிஸ்தான் அணிகள் இரண்டும் தொடரை விட்டு வெளியேறியது.