TCS, Wipro உட்பட முன்னணி IT நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – WFH எண்டு கார்டு?

0
TCS, Wipro உட்பட முன்னணி IT நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - WFH எண்டு கார்டு?
TCS, Wipro உட்பட முன்னணி IT நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - WFH எண்டு கார்டு?
TCS, Wipro உட்பட முன்னணி IT நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – WFH எண்டு கார்டு?

கோவிட்-19 தாக்கம் காரணமாக பல துறை நிறுவனங்கள் மூடப்பட்டது. இருப்பினும் IT துறை ஊழியர்கள் மட்டும் தங்களது பணியை தவறாமல் வீட்டிலிருந்து செய்து வந்தனர். இந்த வகையில் கொரோனா பாதிப்பு சற்று ஓய்ந்து வருவதால் IT பணியாளர்கள் அலுவலகத்திற்கு வர அழைப்பு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முக்கிய தகவல்:

உலகம் முழுவதும் கொரோனா தாக்க எதிரொலியாக அனைத்து நிறுவனங்களும் முடக்கப்பட்டது. இருப்பினும் IT நிறுவனம் மட்டும் எந்த ஒரு சரிவும் இல்லாமல், ஊழியர்கள் வீட்டிலிருந்த படியே பணி செய்தனர்.தற்போது பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து நாடுகளிலும் அமல் படுத்தப்பட்டு கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து நிறுவனங்களும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. இதன் அடிப்படையில் பல துறை ஊழியர்களும் அலுவலகம் சென்று பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சார நேரம் அதிகரிப்பு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இந்த அடிப்படையில் நாட்டின் முன்னணி நிறுவனமான WIPRO மார்ச் 3 முதல் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், வாரத்திற்கு இரண்டு நாள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் அலுவலகத்திற்கு திரும்பலாம். மற்ற நாட்களில் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முன்னணி ஐடி நிறுவனமான COGNIZANT, ஏப்ரல் மாதத்தில் அலுவலகத்தை திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PF கணக்கு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டம்!

INFOSYS 2022ம் ஆண்டு வரையில் ஹைபிரிட் மாடல் பணியை தொடரலாம், அடுத்த 3 – 4 மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் TCS 25/25 திட்டத்தை அறிவித்து, அதன் வகையில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 25% மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும். இருப்பினும் தற்போது வரை 96% வரை IT ஊழியர்கள் வீட்டில் இருந்து தான் வேலை பார்த்து வருகின்றனர். மேலும் அடுத்த சில வாரங்களில் அவசிய தேவை உள்ள ஊழியர்களுக்கு மட்டும் அலுவலகத்திற்கு அழைக்கப்படலாம். மேலும் அலுவலகத்திற்கு வர விருப்பம் உள்ளவர்கள் வரலாம் என்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக INFOSYS நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி ரிச்சர்ட் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!