தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிப்பு – தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிப்பு - தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிப்பு - தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிப்பு – தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

விருதுநகர் மாவட்டத்தில் 2014 முதல் 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு பதிவு:

தமிழகத்தில் அரசு பணிக்கு செல்ல விரும்புவோர் அந்தந்த மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் கல்வி தகுதிகளை பதிவு செய்வது கட்டாயம். இதன் மூலம் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. மேலும் பதிவு செய்த வேலை வாய்ப்பை ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பு செய்வது அவசியமாகும். மேலும் தங்கள் கல்வி தகுதிகளையும் பதிவு செய்ய வேண்டும். தற்போது நிலவி வரும் பெருந்தொற்று காலத்தில் ஏராளமானோர் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

Post Office இல் சேமிக்க நினைப்பவர்கள் கவனத்திற்கு – 6.7% வட்டி விகிதம் வரை கிடைக்கும் சேமிப்பு திட்டம்!

இவர்களுக்கு உதவும் வகையில் அரசு சார்பாக வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காதவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு அரசு கால அவகாசம் வழங்க கோரிக்கை எழுந்தது. அதனால் கடந்த 2014 – 2019 ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் ஒரு கண்டிஷன் – ரஷ்ய அமைச்சர் அறிவிப்பு!

இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில், 2014 – 2019 ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் மார்ச் 1ம் தேதிக்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம்.  https://tnvelaivaaippu.gov.in என்ற இணைய முகவரி வாயிலாகவோ, பதிவஞ்சல் வாயிலாக நேரடியாகவோ சென்று மார்ச் 1ம் தேதிக்குள் புதுப்பித்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!