TNPSC நிர்வாக அதிகாரி பதவிகளில் வேலைவாய்ப்பு – ரூ.71900 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TNPSC நிர்வாக அதிகாரி பதவிகளில் வேலைவாய்ப்பு - ரூ.71900 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC நிர்வாக அதிகாரி பதவிகளில் வேலைவாய்ப்பு - ரூ.71900 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC நிர்வாக அதிகாரி பதவிகளில் வேலைவாய்ப்பு – ரூ.71900 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் நிர்வாக அதிகாரி பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை TNPSC தற்சமயம் வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூன் 18 வரை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-VIII சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள கிரேடு-IV செயல் அலுவலர் பதவிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்புகளை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழக அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் சுமார் 36 நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செயல்முறைகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பங்களை செலுத்தலாம்.

Exams Daily Mobile App Download

இந்த விண்ணப்பப்பதிவு செயல்முறைகள் ஜூன் 18 அன்று முடிவடைகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பில், இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று TNPSC ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அதாவது, ‘தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய அறக்கட்டளைச் சட்டம், 1959 (தமிழ்நாடு சட்டம், 22, 1959) இன் ‘பிரிவு 10’ இன் படி இந்து மதத்தைப் பின்பற்றும் நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப செயல்முறை:

  • TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
  • முகப்புப் பக்கத்தில் உள்ள ‘அறிவிப்புகள்’ என்பதைக் கிளிக் செய்யவும்
  • பிறகு, ‘நிர்வாக அதிகாரி, கிரேடு- IV (குரூப்- VIII சேவைகள்) (தமிழ்நாடு இந்து சமய மற்றும் தொண்டு நிறுவனங்களின் துணை சேவை) என்பதன் கீழ், ‘ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பதிவு செய்த பிறகு TNPSCன் ஒரு முறை பதிவு போர்ட்டலில் உள்நுழையவும்
  • தேவையான அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து, ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி படிவத்தை சமர்ப்பிக்கவும்
  • எதிர்கால பயன்பாட்டிற்காக ஒரு நகலை பதிவிறக்கம் செய்து அச்சிடவும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய ரூ.150 மற்றும் தேர்வுக் கட்டணமாக ரூ.100 சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தேர்வு செயல்முறை:

TNPSC நிர்வாக அதிகாரிகளுக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 11 அன்று நடைபெறும். இது இரண்டு தாள்களைக் கொண்டிருக்கும். அதன்படி, தாள்-I காலை 9:30 மணிக்கு தொடங்கி மதியம் 12:30 மணிக்கு முடிவடையும். தாள்-II மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும்.

சம்பளம்:

இந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.71900 வரை சம்பளம் வழங்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!