TNPSC கருவூலங்கள் & கணக்குகள் துறையில் வேலைவாய்ப்பு – ஜூன் மாதத்தில் அறிவிப்பு வெளியீடு!

0
TNPSC கருவூலங்கள் & கணக்குகள் துறையில் வேலைவாய்ப்பு - ஜூன் மாதத்தில் அறிவிப்பு வெளியீடு!
TNPSC கருவூலங்கள் & கணக்குகள் துறையில் வேலைவாய்ப்பு - ஜூன் மாதத்தில் அறிவிப்பு வெளியீடு!
TNPSC கருவூலங்கள் & கணக்குகள் துறையில் வேலைவாய்ப்பு – ஜூன் மாதத்தில் அறிவிப்பு வெளியீடு!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையில் காலியாக இருக்கும் அலுவலர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்புகள் ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று TNPSC செயலர் உமா மகேஸ்வரி தகவல் அளித்துள்ளார்.

TNPSC வேலைவாய்ப்பு

தமிழக அரசுப் பணிக்கு தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாக தேர்வு செய்யும் பணிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சிறப்பாக செய்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் அரசுத்துறைகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்கு TNPSC சார்பில் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக காணப்படும் கொரோனா பேரலைத்தொற்றுக்கு மத்தியில் TNPSC சார்பில் எந்தவகையான போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை.

TN Job “FB  Group” Join Now

இதற்கிடையில் நடப்பு ஆண்டில் TNPSC தேர்வுகளை நடத்துவதற்கு திட்டமிட்ட அரசாங்கம் அதற்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டிருந்தது. இதில் குரூப் 2, குரூப் 4 உட்பட 32 வகையான தேர்வுகள் நடத்தப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தேர்வு கால அட்டவணையின் படி கடந்த மே 21ம் தேதியன்று தமிழகம் முழுவதும் குரூப் 2மற்றும் 2A தேர்வுகள் நடத்தப்பட்டது. அந்த வகையில் சுமார் 5000க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு 11 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர்.

சென்னை: இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – குஷியில் நகைப்பிரியர்கள்!

இதனை தொடர்ந்து வரும் ஜூலை மாதம் 24ம் தேதியன்று குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட வருடாந்திர தேர்வு கால அட்டவணையில் இடம்பெறாத சில பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என TNPSC செயலர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் ‘தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையில் உள்ள கணக்கு அலுவலர் நிலை 3 பதவிகளுக்கான அறிவிக்கை ஜூன் மாதத்தில் வெளியாகும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!