தமிழகத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

0
தமிழகத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ
தமிழகத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ

தமிழகத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் துறை வாரியாக போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தாக்கத்தால் 2 ஆண்டுகளாக TNPSC தேர்வுகள் நடத்தப்படவில்லை. தற்போது பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வேலைவாய்ப்புகளை தேடி வரும் நிலையில் அரசுத்துறை காலிப்பணியிடங்கள் அதனை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. அதிக எண்ணிக்கையிலான மக்கள் எழுத கூடிய குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது.

Post Office சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் வேலூர் இணை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் என காலியாக உள்ள 6 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்படவுள்ளது. அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் -2 இப்பணியிடத்திற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக விண்ணப்பிப்பவர்களுக்கு மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். தேர்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 15,700 – 50,000 வரை வழங்கப்படும்.

மேலும் ஓட்டுநர் காலியிடங்கள் 2 உள்ளது இதற்கு : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அவர் நல்ல உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். வயது வரம்பு 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் மாத ஊதியம் 19,500 – 62,000 வரை வழங்கப்படும். மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here