தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.58,600 வரை ஊதியம்!

0
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு - மாதம் ரூ.58,600 வரை ஊதியம்!
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு - மாதம் ரூ.58,600 வரை ஊதியம்!
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.58,600 வரை ஊதியம்!

கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் உள்ள 13 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

தமிழகம் கொரோனா மூன்றாம் அலையிலிருந்து மீண்டு வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் துறைகள் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. அதன்படி குரூப் 2,2A தேர்வு மற்றும் குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. அதற்கான விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்து தேர்வு கடந்த மாதம் 21ம் தேதி சிறப்பாக நடைபெற்றது.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து தற்போது இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் எழுத்தர், காவலர், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் 13 காலியிடங்கள் உள்ளது. வழக்கு எழுத்தர் பணியிடத்தில் 1 காலியிடம் உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ.18,500 முதல் 58,600 வரை வழங்கப்படுகிறது. அடுத்ததாக சீட்டு விற்பனை எழுத்தர் பணியில் 1 காலியிடம் உள்ளது. இப்பணிக்கு ஊதியமாக ரூ.10,000 – 31,500 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டில் இருந்து சிபிஎஸ்இ பாடத்திட்டம்? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!

மேலும் காவலர் பணியில் ஒரு காலியிடம் உள்ளது. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஊதியம் மாதம் ரூ.15,900 – 50,400 வரை வழங்கப்படும். அதனை தொடர்ந்து துப்புரவு பணியாளர் பதவியில் 3 காலியிடங்கள் உள்ளது. தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு சம்பளம் ரூ.10,000 – 31,500 வழங்கப்படும். திருமஞ்சனம் காலியிடங்களின் எண்ணிக்கை 2 ஆக உள்ளது. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வேதபாட சாலையில் ஓராண்டு படித்திருக்க வேண்டும்.

இப்பணிக்கு சம்பளம் ரூ.15,900 – 50,400 ஆகும், உதவி யானைப்பாகன் காலியிடங்களின் எண்ணிக்கை – 1 தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். யானை வளர்க்க பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில், பேரூர், பேரூர் வட்டம், கோவை மாவட்டம் – 541010 என்ற முகவரிக்கு ஜூன் 28ம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here