தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – காலிப்பணியிடங்கள், கல்வி தகுதி குறித்த விவரங்கள் இதோ!

0
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு - காலிப்பணியிடங்கள், கல்வி தகுதி குறித்த விவரங்கள் இதோ!
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு - காலிப்பணியிடங்கள், கல்வி தகுதி குறித்த விவரங்கள் இதோ!
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – காலிப்பணியிடங்கள், கல்வி தகுதி குறித்த விவரங்கள் இதோ!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் உள்ள உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் இந்த ஆண்டு ஏராளமான வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் காவலர்கள் , துப்புரவு பணியாளர்கள் , தூர்வை , காவலர் போன்ற பதவிகளுக்கு ஆட்கள் தேர்தெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக நன்கு தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

அதனை தொடர்ந்து மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், இந்து மதத்தை சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் மீது எவ்வித குற்றவியல் நடவடிக்கைகளும் இருக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தகுதிகள் உடையவர்கள்  https://srirangamranganathar.hrce.tn.gov.in மற்றும் www.srirangam.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து பணிக்குரிய விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதனை முழுமையாக சரியான விவரங்களை கொண்டு பூர்த்தி செய்ய வேண்டும்.

FD கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ஜாக்பாட் – வட்டி விகிதம் அதிரடி உயர்வு! வாடிக்கையாளர்கள் ஹாப்பி!

Exams Daily Mobile App Download

இந்த விண்ணப்பத்தினை 17.10.2022-ம் தேதி மாலை 5 மணிக்குள் இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620006.” என்ற முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

இந்த விண்ணப்பத்தின் உறையில் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டபட்டிருக்க வேண்டும். கொடுக்கப்பட்ட காலத்திற்குள் வந்து சேரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அதில் தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்க படுபவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ. 10,000 முதல் அதிகபட்சமாக ரூ. 50,400 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!