தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு – 25,000 ரூபாய் வரை ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு - 25,000 ரூபாய் வரை ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு - 25,000 ரூபாய் வரை ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு – 25,000 ரூபாய் வரை ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்தான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப ஜூலை 22 தான் கடைசி தேதி என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வனத்துறை:

தமிழ்நாடு வனத்துறை, வனவிலங்கு பாதுகாப்பு மேம்பட்ட நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, திட்ட உதவியாளர் (Project Assistant – DNA) பணிக்கு 1 காலிப் பணியிடமும், திட்ட உதவியாளர் (Project Assistant – Health Monitoring) பணிக்கு 1 காலிப் பணியிடமும், திட்ட உதவியாளர் (Project Assistant – STR) 1 காலிப்பணியிடமும், திட்ட உதவியாளர் (Project Assistant – SDMA) பணிக்கு 2 காலிப்பணியிடமும், திட்ட உதவியாளர் (Project Assistant – Assessment & Identification) பணிக்கு 2 காலிப்பணியிடமும் என மொத்தமாக 8 காலிப் பணியிடங்கள் உள்ளன.

Exams Daily Mobile App Download

மேலும், Project Assistant – DNA, Project Assistant – STR ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர் M.Sc, M.Tech in BioTechnology, Molecular Biology/ Genetics, Genetic Engineering இவற்றில் ஏதேனும்
ஒரு பட்டப்படிப்பும் ஒரு ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். இதனையடுத்து, Project Assistant – Health Monitoring, Project Assistant – SDMA, Project Assistant – Assessment & Identification ஆகிய பணியிடங்களுக்கு M.Sc in Wildlife Biology, Zoology ல் பட்டப்படிப்பும் ஒரு ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், Project Assistant – DNA, Project Assistant – Health Monitoring ஆகிய பணியிடங்களுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, Project Assistant – STR, Project Assistant – SDMA, Project Assistant – Assessment & Identification ஆகிய பணியிடங்களுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விருப்பமும் தகுதியும் பெற்றவர்கள் https://www.forests.tn.gov.in/app/webroot/img/AIWC%20%20Recruitment%20of%20Project%20Assistant%20-%20Notification.pdf என்கிற பக்கத்திற்கு சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட்அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து Additional Principal Chief Conservator of Forests and Director, AIWC (R,T & E), Vandalur, Chennai – 600048 என்கிற முகவரிக்கு வரும் ஜூலை 22 ஆம் தேதிக்குள் அஞ்சல் அனுப்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!