PNB வங்கியில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிப்பதற்கான முழு விபரங்கள் இதோ!

0
PNB வங்கியில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிப்பதற்கான முழு விபரங்கள் இதோ!
PNB வங்கியில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிப்பதற்கான முழு விபரங்கள் இதோ!
PNB வங்கியில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிப்பதற்கான முழு விபரங்கள் இதோ!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்டவற்றை பற்றி விரிவாக பார்ப்போம். இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு ஏராளமான இளைஞர்கள் தங்களின் வேலைவாய்ப்பை இழந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டு வருகிறது. அத்துடன் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள மேலாளர் பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அரசாணை வெளியீடு!

இப்பணிக்கு விண்ணப்பிக்க 25 வயது முதல் 35 வரை நிரம்பியவராக இருக்க வேண்டும். அத்துடன் அரசு அறிவித்த விதிகளின் படி குறிப்பிட்ட சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு பணியிடத்திற்கும் ஒவ்வொரு கல்வித் தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் தங்கள் தொடர்புடைய துறை சார்ந்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது தனியார் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் இதில் தகுதியான நபர்கள் ஆன்லைன் தேர்வு மூலமாகவும் நேர்முகத் தேர்வு மூலமாகவும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ExamsDaily Mobile App Download

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://www.pnbindia.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.  இதில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் பிரிவுகளை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் உள்ளிட்டவர்களுக்கு தலா ரூ.50 மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.  இதில் மற்ற பிரிவினருக்கு ரூ.850க்கு விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.  இதற்கு இன்று முதல் மே 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ள வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!