தமிழகத்தில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு IT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – அரசின் சூப்பர் திட்டம்!

0
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு IT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - அரசின் சூப்பர் திட்டம்!
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு IT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - அரசின் சூப்பர் திட்டம்!
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு IT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – அரசின் சூப்பர் திட்டம்!

தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி 60% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் அரசு சார்பில் பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு பயிற்சி:

தமிழகத்தில் படித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவியாக இருக்க பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்க அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் 2021-22ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரபல ஐடி நிறுவனமான HCLல் பயிற்சி உடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில், தமிழக அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக அரசுப் பள்ளி மாணவர்கள் 2,000 நபர்களுக்கு HCL Techbee Early Career Program என்ற திட்டத்திற்கான பயிற்சிக்கு முழு கட்டணம் வழங்கப்பட இருக்கிறது.இந்த திட்டம் மூலம் மாநிலம் முழுவதில் இருந்து வரும் மாணவர்களுக்கும் HCL Technologies நிறுவனத்தில் முழு நேர பணி கிடைக்க இருக்கிறது. அது மட்டுமில்லாமல் Internship பயிற்சியின் போது 7வது மாதம் முதல், மாதம்தோறும் ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்பட இருக்கிறது.

இந்திய டிவி சேனல்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு – மத்திய ஒளிபரப்பு துறை அறிவிப்பு!

Follow our Instagram for more Latest Updates

மேலும் இந்த பயிற்சி முடிந்து பணியில் சேரும் போது தொடக்கத்தில் ஊதியமாக ஆண்டுக்கு ரூ.1.70 லட்சம் முதல் ரூ.2.20 லட்சம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே உயர் கல்வி பயில BITS Pilani, Amity மற்றும் SASTRA பல்கலைக்கழகங்களில் வாய்ப்புகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும் கல்வி கட்டணத்திற்கான ஒரு பகுதியை HCL Technologies நிறுவனம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!