இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!

0
இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!
இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!
இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!

இந்தியன் தென்மேற்கு ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக ரயில்வே வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் சரக்கு ரயில் மேலாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலானோர் தங்களின் வேலைகளை இழந்தனர். அத்துடன் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் வேலைவாய்ப்பை உருவாக்கி தர முடியாத நிலை இருந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்தியன் தென்மேற்கு ரயில்வே மண்டலத்தில் சரக்கு ரயில் மேலாளர் பணியிடத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – DA நிலுவைத்தொகை செட்டில்மெண்ட்!

ஆனால் இதற்கு தென்மேற்கு ரயில்வே துறை மற்றும் ரயில் சக்கர தொழிற்சாலை உள்ளிட்டவைகளில் பணி புரிவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அத்துடன் மற்றவர்கள் விண்ணப்பத்தாலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 18 முதல் 42 வயது வரை இருக்க வேண்டும். இதில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினராக இருப்பின் 3 ஆண்டுகள் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவராக இருப்பின் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – வருவாய்த்துறை முக்கிய அறிவிப்பு!

இப்பணியில் தகுதியான பணியாளர்கள் கம்ப்யூட்டர் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன்பின்பு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்டவை நடத்தப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள். இவர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைகளில் 5ஆவது பிரிவின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் https://www.rrchubli.in/ என்ற தென்மேற்கு ரயில்வே மண்டலத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறையில் வருகிற ஏப்ரல் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!