அக்னிவீர் திட்டத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க செப்டம்பர் 7 கடைசி நாள்!

0
அக்னிவீர் திட்டத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க செப்டம்பர் 7 கடைசி நாள்!
அக்னிவீர் திட்டத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க செப்டம்பர் 7 கடைசி நாள்!
அக்னிவீர் திட்டத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க செப்டம்பர் 7 கடைசி நாள்!

அக்னிவீர் திட்டத்தில் காலியாகவுள்ள பெண்களுக்கான அக்னிவீர் ஜெனரல் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற இருக்கிறது. மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 7 தான் கடைசி நாள் என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்னிவீர் திட்டம்:

மத்திய அரசின் அக்னிவீர் திட்டம் மூலமாக ராணுவம், கப்பல், விமான படை என மூன்று பிரிவுகளில் பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, 4 ஆண்டுகள் என்கிற அடிப்படையில் பணியிடம் நிரப்பப்படுகிறது. ராணுவ காவல் துறை பொதுப் பணிப் பிரிவின் கீழ் காலியாக உள்ள பெண் அக்னிவீர் ஜெனரல் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் கர்நாடகாவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கர்நாடகா, கேரளா மற்றும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு மற்றும் மாஹே ஆகிய மாநிலங்களை சேர்ந்த பெண்களுக்கு அக்னிவீர் ஆட்சேர்ப்பு பெங்களூர் ஆட்சேர்ப்பு அலுவலகம் மானெக்ஷா பரேட் மைதானத்தில் வைத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த பணியிடங்களுக்கான வயது, தகுதி, கல்வித்தகுதி மற்றும் முக்கிய அறிவிப்புகள் அனைத்தையும் பெங்களூரு தலைமையக ஆள்சேர்ப்பு மண்டலம் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியிட்டது. அதாவது, ராணுவப் பெண் அக்னிவீர் ஜெனரல் பணியிடங்களுக்கான வயது 17.5 – 23 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மூலமான விண்ணப்பமுறை நேற்றில் இருந்து நடைபெற்று வருகிறது. மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 7 தான் கடைசி தேதி என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

TN TET அரசு ஆசிரியராக பணியாற்ற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

விருப்பமும் தகுதியும் பெற்றவர்கள் https://www.joinindianarmy.nic.in/Authentication.aspx என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். வெற்றிகரமாக பதிவு செய்த அட்மிட் கார்டு பதிவு செய்யப்பட்ட மெயில் ஐடிக்கு அக்டோபர் 12 மற்றும் 13 ஆம் தேதிக்குள் அனுப்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியில் சேருபவர்களுக்கு முதலாமாண்டு சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும் எனவும், பிடித்தம் போக ரூ.21,000மும், இரண்டாமாண்டு பிடித்தம் போக 23,100 ரூபாய் சம்பளமும், மூன்றாமாண்டு 25,580 ரூபாய் சம்பளமும், நான்காமாண்டு 28,000 ரூபாய் சம்பளமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here