TCS நிறுவனத்தில் M.Sc பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தகுதி, சம்பளம், விண்ணப்ப முறை இதோ!

0
TCS நிறுவனத்தில் M.Sc பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - தகுதி, சம்பளம், விண்ணப்ப முறை இதோ!
TCS நிறுவனத்தில் M.Sc பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - தகுதி, சம்பளம், விண்ணப்ப முறை இதோ!
TCS நிறுவனத்தில் M.Sc பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தகுதி, சம்பளம், விண்ணப்ப முறை இதோ!

இந்தியாவின் முன்னணி IT நிறுவனமான TCS தனது அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு M.Sc பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இதற்கான தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இப்போது காணலாம்.

IT வேலைவாய்ப்பு

நாடு முழுவதும் கொரோனா பேரலைத்தொற்று பாதிப்புகள் மீண்டுமாக உயர்ந்து வரும் இந்த சூழலில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மீண்டுமாக அலுவலகத்திற்கு வரவழைத்து வருகின்றன. இதற்கிடையில் TCS, இன்போசிஸ் உள்ளிட்ட முக்கியமான நிறுவனங்கள் கலப்பின வேலை மாதிரியை பின்பற்ற முடிவு செய்துள்ளன. இந்த நிலையில், IT சேவைகளுக்கான தேவைகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த நிதியாண்டில் 60,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க TCS நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த நிறுவனம், கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளது. இப்போது இந்த நிதியாண்டுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அதன் அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள சில காலியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கணிதம், புள்ளியியல் அல்லது பொருளாதாரத்தில் எம்.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் அல்லது பொருளாதாரத்தில் எம்.ஏ பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பங்களை செலுத்தலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இப்போது, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 1 வரை கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பங்களை செலுத்தலாம். மேலும், இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் முன், கல்வித் தகுதி, சம்பளம் மற்றும் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு உள்ளிட்ட கூடுதல் தகவல்களை இப்பதிவில் காண்போம்.

கல்வி தகுதி.

பொருளாதாரத்தில் எம்.எஸ்சி பட்டம் அல்லது பொருளாதாரத்தில் எம்.ஏ பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
தவிர 2020, 2021 அல்லது 2022 இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் (NIOS) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 28 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அனுபவம்:

2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

தமிழக அரசின் ஷாக் அறிவிப்பு – அதிருப்தியில் அரசு ஊழியர்கள்!

விண்ணப்ப முறை:

TCS NextStep போர்ட்டலில் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜூன் 1, 2022

தேர்வு செயல்முறை:

நேரடி நேர்காணல்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!