Wipro – பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு, செப்.15 வரை விண்ணப்பம்!

0
Wipro - பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு, செப்.15 வரை விண்ணப்பம்!
Wipro - பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு, செப்.15 வரை விண்ணப்பம்!
Wipro – பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு, செப்.15 வரை விண்ணப்பம்!

இந்தியாவை சேர்ந்த முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனமான விப்ரோ, தனது வளாகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான புதிய வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. அதற்கான விண்ணப்பம், தகுதி, தேர்வு உள்ளிட்ட விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புகள்

சமீப காலமாக தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் புதிய வேலை வாய்ப்பு விகிதங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் செயல்பட கூடிய சில முன்னணி நிறுவனங்களும் புதிய நிதியாண்டில் ஆயிரக்கணக்கிலான ஊழியர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் சில நிறுவனங்கள் அதற்கான வேலைகளை ஏற்கனவே துவங்கியுள்ளது. அந்த வரிசையில் இந்தியாவை சேர்ந்த பிரபல IT நிறுவனமான விப்ரோ, அதன் ‘எலைட் நேஷனல் டேலண்ட் ஹன்ட் 2022’ என்ற தலைப்பின் கீழ் நாடு முழுவதும் புதிய ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

IPL 2021 : வாஷிங்டன் சுந்தர் விலகல் – புதிய வீரரை தேர்வு செய்த RCB அணி!

இதற்கான விண்ணப்பப்பதிவு செயல்முறை ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், கடைசி தேதியாக செப்டம்பர் 15 அறிவிக்கப்பட்டுள்ளது. விப்ரோ நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு தேர்வு செயல்முறை இரண்டு படிகளை கொண்டுள்ளது. அவை ஆன்லைன் மதிப்பீடு மற்றும் வணிக விவாதம் ஆகும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு விருப்ப கடிதங்களும், பின்னர் சலுகைக் கடிதமும் வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில் முதல் கட்டமாக செப்டம்பர் 25, 27 ஆகிய தேதிகளில் ஆன்லைன் மதிப்பீடு நடத்தப்படும்.

இது திறன் சோதனை, லாஜிக்கல் திறன், குவான்டிட்டி திறன், ஆங்கில மொழிப்புலமை ஆகிய பிரிவுகளை கொண்டுள்ளது. எழுத்துத் தேர்வு, கட்டுரை மூலமாகவும், ஆன்லைன் நிரலாக்க சோதனை Java, C, C++ or Python உள்ளிட்ட மொழிகளிலும் நடைபெற உள்ளது. இந்த ஆட்சேர்ப்பு முடிவுகள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு எந்த தகவல்தொடர்பு மூலமாகவோ அறிவிக்கப்படும். இப்பணிக்கான தகுதிகளாக B.E, B.Tech அல்லது M.E ஆகிய படிப்புகளை ஏதேனும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து (IIT, NIT) 2022 ஆம் ஆண்டுக்குள் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

அதே நேரத்தில் ஃபேஷன் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் இன்ஜினியரிங், வேளாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பத் துறையில் துறையை சேர்ந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாது. மேலும் பல்கலைக்கழக சட்டத்தின் படி 60% அல்லது 6.0 என்ற ஒட்டுமொத்த கிரேடு பாயிண்ட் சராசரி (CGPA) அல்லது அதற்கு சமமான மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். இது தவிர 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் குறைந்தது 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.

பிற பொது தகுதி அளவுகோல்களை பொருத்தளவு:
  • விண்ணப்பதாரர்கள் ஒரு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  • அல்லது இந்திய வம்சாவளி (POI) அட்டை அல்லது வெளிநாட்டு குடியுரிமை அட்டை (OCI) அட்டை வைத்திருக்க வேண்டும்.
  • பூடான் அல்லது நேபாளத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அந்தந்த குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • ஆன்லைன் மதிப்பீட்டின் போது ஒரு பின்னடைவு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
  • 10 ஆம் வகுப்புக்கும், பட்டப்படிப்புக்கும் இடையில் மூன்று வருட இடைவெளி மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
  • கடந்த ஆறு மாதங்களில் நடைபெற்ற எந்தவொரு தேர்வு செயல்முறையை எழுதிய விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வுக்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!