தமிழகத்தில் 2022 ம் நிதியாண்டில் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – தொழில் துறை அமைச்சர் தகவல்!

0
தமிழகத்தில் 2022 ம் நிதியாண்டில் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - தொழில் துறை அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் 2022 ம் நிதியாண்டில் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - தொழில் துறை அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் 2022 ம் நிதியாண்டில் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – தொழில் துறை அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் 2021-2022 நிதியாண்டில், மத்திய அரசு நிறுவனங்களுடன் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைக்கும் என்று தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. தொற்று தாக்கத்தின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் ஊரடங்கால் வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், கடைகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டது. இதனால் ஏராளமானோர் வேலையிழந்து மாத வருமானமின்றியும் சிரமப்பட்டனர். இந்த நேரத்தில் அரசு நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியது. இதன் விளைவாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தது.

தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – வருவாய்த்துறை முக்கிய அறிவிப்பு!

தற்போது மக்கள் பதிப்புகளில் மீண்டு தங்களின் இயல்பு வாழ்க்கையை நோக்கி திரும்பி வருகின்றனர். இதனையடுத்து வேலைவாய்ப்பு முக்கிய ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் TNPSC தேர்வுகள் அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது 2021-2022 நிதியாண்டில், மத்திய அரசு நிறுவனங்களுடன் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 2021-30 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறும் வகையில் மாநிலத்தின் உற்பத்தித் துறையானது பொருளாதார வளர்ச்சியில் மையப் புள்ளியை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

புலனாய்வு பணியகத்தில் ரூ.1,42,400/- ஊதியத்தில் வேலை – 150 காலிப்பணியிடங்கள் !

எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ பாகங்கள், தொழில்துறை பூங்காக்கள், இலவச வர்த்தக கிடங்கு மண்டலங்கள், ஐடி/ஐடிஇஎஸ், பொது உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், காலணி, மருந்து மற்றும் ஜவுளி, மற்றும் மரச்சாமான்கள் உற்பத்தி போன்ற புதிய துறைகளில் முதலீடுகள் குவிந்துள்ளது என்று கூறினார். மேலும் 2030-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை எட்டுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்குத் தேவையான பொது உள்கட்டமைப்பை மேம்படுத்த, தொழில் மற்றும் தொழில் சங்கங்களின் பங்களிப்புடன் ரூ.100 கோடி சிறப்பு நிதியை தமிழக அரசு பங்களிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!