Wipro நிறுவனத்தில் 250 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் கவனத்திற்கு!

0
Wipro நிறுவனத்தில் 250 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் கவனத்திற்கு!
Wipro நிறுவனத்தில் 250 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் கவனத்திற்கு!
Wipro நிறுவனத்தில் 250 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் கவனத்திற்கு!

தற்போது நார்வேயில் செயல்பட்டு வரும் விப்ரோவின் கிளை நிறுவனத்தில் சுமார் 250 ஊழியர்களை புதிதாக பணியமர்த்துவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

IT வேலைவாய்ப்பு

இந்தியாவின் முன்னணி தகவல்தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோ, அடுத்த இரண்டு ஆண்டுகளில் நார்வேயில் உள்ள தனது அலுவலகத்தில் சுமார் 265 ஊழியர்களை பணியில் அமர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட ஊழியர்கள் பணியமர்த்தப்பட்ட பிறகு, இந்த நிறுவனத்தின் ஒட்டு மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 350 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்போது விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ள இந்த பணியமர்த்தல் நடவடிக்கையின் நோக்கம் அதிக உள்ளூர் தொடர்பை வழங்கும் புதிய இயக்க மாதிரியின் ஒரு பகுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இது குறித்து அந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், நோர்டிக்ஸ் கூறுகையில், ‘அதிகரித்த உள்ளூர் முதலீடு எங்கள் புதிய இயக்க மாதிரியின் ஒரு பகுதியாகும். இது ஐரோப்பாவில் உள்ள மூலோபாய சந்தை அலகுகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே, பிராந்தியத்தில் உள்ள வணிகங்களில் ஒரு கண்டுபிடிப்பு பங்காளியாக இதன் மூலம் எங்களை நிலைநிறுத்திக் கொள்கிறோம்.

தமிழகத்தில் ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்பும் பணி தீவிரம் – முக்கிய அறிவிப்பு!

மேலும் இந்த வணிக மாற்றம் பெரும்பாலும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் இயக்கப்படுகிறது. இது நார்வே நிறுவனங்கள் தங்கள் இலக்குகளை நிறைவேற்ற உதவும் முக்கிய நிலையில் விப்ரோவை வைக்கிறது. மேலும் இந்த வெற்றிகரமான டிஜிட்டல் மயமாக்கல் இல்லாமல், நிலையான வளர்ச்சி இலக்குகளை 2030க்குள் எட்ட முடியாது என்பதும் தெளிவாகிவிட்டது. நார்வேயில் உள்ள உள்ளூர் தேவை மற்றும் தொலைத்தொடர்பு துறைகளை பூர்த்தி செய்ய, கிளவுட் சேவைகள் மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்த ஆட்சேர்ப்பு செய்யப்பட இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!