தமிழகத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்!

0
தமிழகத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்!
தமிழகத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்!
தமிழகத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்!

தமிழகத்தில் ஒவ்வொரு இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை சென்னையில் நடக்க இருக்கும் வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு படித்திருந்தாலே கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் நோக்கத்துடன் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமின் மூலமாக 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு அலுவலகங்களும் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாமினை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Exams Daily Mobile App Download

கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 30 வயதிற்கு உட்பட்ட 8- ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், 10- ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், 12- ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.டி.ஐ டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு டிகிரி பெற்றவர்கள் அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னை – 32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தொழிசார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், வேலையில்லாமல் திண்டாடி வரும் இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கொ.வீர ராகவ ராவ் அறிவுறுத்தியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!