தமிழகத்தில் செப்.17ல் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரங்கள் இதோ!

0
தமிழகத்தில் செப்.17ல் வேலைவாய்ப்பு முகாம் - முழு விவரங்கள் இதோ!
தமிழகத்தில் செப்.17ல் வேலைவாய்ப்பு முகாம் - முழு விவரங்கள் இதோ!
தமிழகத்தில் செப்.17ல் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரங்கள் இதோ!

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் வேலையில்லாமல் திண்டாடி கொண்டிருக்கும் இளைஞர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, மதுரை மாவட்டத்தில் அமெரிக்கன் கல்லூரியில் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் வீ ஆர் யுவர் வாய்ஸ் என்கிற தொண்டு நிறுவனத்தின் மூலமாக சென்னை, நெல்லை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. தற்போது முதன்முறையாக மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் நூற்றுக்கணக்கான தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள இருக்கின்றன. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்லாமல் திருநங்கைகளும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தள்ளி வைப்பு – அமைச்சர் கூறிய விளக்கம்!

Exams Daily Mobile App Download

மேலும், இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் அனைவரும் www.weareyourvoice.org என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று தங்களது விவரங்களை பதிவு செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முகாமில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விரும்பினால் 75575 50999, 97007 99993 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!