தமிழகத்தில் நவ.18 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – மிஸ் பண்ணிடாதீங்க!!
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் நவ.18 ஆம் தேதி பல முன்னணி நிறுவனங்கள் பங்குபெறும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏ.வி.எஸ்.கலை அறிவியல் கல்லூரியில் நவ.18 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் வங்கிகள், காப்பீடு, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், கட்டிடம் சார்ந்த அனைத்து முன்னணி நிறுவனங்களும் கலந்துகொள்ள இருக்கின்றன.
மீண்டும் இந்தியாவிற்கு திரும்பும் சந்திராயன் -3?? இஸ்ரோ புதிய அப்டேட்!!
காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ உள்ளிட்ட அனைத்து கல்வி தகுதி பெற்றவர்களும் கலந்துகொண்டு தங்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய 9499055941 என்கிற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.