தமிழகத்தில் நாளை (ஏப்.13) வேலைவாய்ப்பு முகாம் – அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்!

0
தமிழகத்தில் நாளை (ஏப்.13) வேலைவாய்ப்பு முகாம் - அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்!
தமிழகத்தில் நாளை (ஏப்.13) வேலைவாய்ப்பு முகாம் - அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்!
தமிழகத்தில் நாளை (ஏப்.13) வேலைவாய்ப்பு முகாம் – அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது அநேக இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர். இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் நாளை வெண்ணந்தூரில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு ஏராளமான இளைஞர்கள் தங்களின் வேலைவாய்ப்பை இழந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை அரசு உருவாக்கி வருகிறது. இதனை தொடர்ந்து நாளை நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்துாரில் தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

1 முதல் 8 வரையுள்ள மாணவர்களுக்கு மதியம் 12:30 வரை மட்டுமே பள்ளிகள் திறப்பு – நகர நிர்வாகம் அறிவிப்பு!

இம்முகாமில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ், மாவட்ட இயக்க மேலாண் அலகு என்பதன் கீழ் இம்முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் வெண்ணந்தூர் வட்டார இயக்க மேலாண் அலகில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் நிறுவனங்களும் பங்கேற்கலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள நினைக்கும் நிறுவனங்கள் திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண் அலகு, கலெக்டர் அலுலகம், கூடுதல் கட்டிடம், நாமக்கல் என்ற முகவரிக்கு நேரில் சென்று பதிவு செய்யலாம். அத்துடன் 04286 281131 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டும் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு இன்று மாலை 5 மணி வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இம்முகாமில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான பணியை தேர்ந்தெடுத்து கொண்டு வேலைகளை பெற்று கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here