தமிழகத்தில் ஜூலை 30ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – முன்பதிவு துவக்கம்!
வசந்த் அன் கோ நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 30 ஆம் தேதி நடைபெறும் எனவும், அதற்கான முன்பதிவு ஜூலை 16 ஆம் தேதி முதல் ஜூலை 22 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
இந்தியாவில் வேலையில்லாமல் திண்டாடி கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதனிடையே, இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனமான வசந்த் அன் கோ நிறுவனம் மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மாபெரும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக வேலைவாய்ப்பு முகாமினை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
Exams Daily Mobile App Download
அதன்படி, வசந்த் அன் கோ நிறுவனத்தின் சார்பில் நடைபெற இருக்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூலை 30 ஆம் தேதி நாகா்கோவிலில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். அதாவது, பத்தாம் வகுப்பு தோ்ச்சி, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, முதுநிலை, பொறியியல் , ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ என அனைவருமே இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி & கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – மேலாண் இயக்குனர் முக்கிய தகவல்!
மேலும், இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் அதற்கான முன்பதிவில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும். அதாவது, இதற்கான முன்பதிவு வரும் ஜூலை 16 ஆம் தேதி முதல் ஜூலை 22 ஆம் தேதி வரை நாகா்கோவில் கோா்ட் சாலை, ஆசாரிப்பள்ளம், மாா்த்தாண்டம், கருங்கல் மற்றும் பனச்சமூட்டில் உள்ள வசந்த் அன் கோ கிளைகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் பயோடேட்டா, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் அதன் நகல்களை கட்டாயமாக எடுத்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இப்படி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் எத்தனை லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. தயவு செய்து சொல்லுங்ககள் பார்ப்போம்