பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – பிரபல நிறுவனம் பங்கேற்பு! மாவட்ட ஆட்சியர் தகவல்!

0
பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் - பிரபல நிறுவனம் பங்கேற்பு! மாவட்ட ஆட்சியர் தகவல்!
பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் - பிரபல நிறுவனம் பங்கேற்பு! மாவட்ட ஆட்சியர் தகவல்!
பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – பிரபல நிறுவனம் பங்கேற்பு! மாவட்ட ஆட்சியர் தகவல்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னணி நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளது. இந்த முகாமில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் நோக்கில் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் முதல் அனைவரும் தங்களின் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு முன்னணி தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். தற்போது நடத்தப்பட்டு வரும் வேலை வாய்ப்பு முகாம்கள் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் அதனை தொடர்ந்து இந்தியாவின் முன்னணி டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளனர். இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்.அதில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நடத்தும் வேலைவாய்ப்பு முகமானது வரும் சனிக்கிழமை (அக்.22) அன்று கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கவனத்திற்கு – அரசுத் தேர்வு இயக்குநரின் செயல்முறை வெளியீடு!

Exams Daily Mobile App Download

இதில் 2020-2021 மற்றும் 2022-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளார். இவர்களுக்கு வயது வரம்பு 18 லிருந்து 20 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த முகாமில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.16,557 ஊதியம் வழங்கப்படும். அத்துடன் உணவு, தங்குமிடம், 12 நாட்கள் பயிற்சி, போக்குவரத்து, மேற்கொண்டு கல்வி பயில வாய்ப்புகளும் நிறுவனத்தால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி முடிந்த பிறகு பணி நிரந்தரமும் செய்யப்படும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!